உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் ‘உலகத்தமிழ்’ திங்கள் மின்னிதழ் http://online.anyflip.com/tntjr/rzsx/ என்ற ஒரு பகிர்வு பார்த்தேன். இணைப்பில் இருக்கும் இதழுக்குள் சென்று முழுவதுமாகப் படித்தால் அதிர்ச்சியாக இருந்தது. செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா,தந்தை பெரியார் பிறந்த நாட்கள் வரும் மாதம்.தந்தை பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக முதலமைச்சர், சமூக நீதி யின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட நாள். அதைப்போல அறிஞர் அண்ணா வின் பிறந்த நாள் நாம் எல்லாம் உவப்பாக கொண்டாடும் திருநாள். உலகத் தமிழ் திங்கள் மின் இதழில் இந்த இரு பெரும் ஆளுமைகள் பற்றிய கவிதையோ,கட்டுரையோ ..எந்தப் படைப்போ,குறிப்போ எது வுமே இல்லை...திரும்பத் திரும்பப் படித்துப்பார்த்தேன்.இல்லை. ஏன்? என்னும் கேள்வி எழுகிறது. அதைப் போல மதுரை உலகத்தமிழ்ச்சங்கம் நூலகம் மிகச்சிறப்பான கட்டமைப் போடு அமைக்கப்பட்டு இருக் கிறது.அந்த நூலகம் திராவிட இயக்க எதிர்ப்பு எழுத்தாளர்களின் நூல்களால் நிரப்பப்பட்டு இருக் கிறது. தந்தை பெரியார் பற்றிய ஒரு நூல் கூட இல்லை. அறிஞர் அண்ணா எழுதிய நூல்கள் மிகக் கொஞ்சம். டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய நூல்களோ, திராவிட இயக்க எழுத்தாளர்களின் நூல்களோ பெரும்பாலும் இல்லை.
அதைப்போல சிம்மக்கல்லில் உள்ள மதுரை மய்ய நூலகத்தில் இருந்த தந்தை பெரியாரின் ஒளிப் படத்தை எடுத்துவிட்டு மறுபடியும் வைக்காமலே இருக்கிறார்கள். இவை தற்செயலான செயல்களாக எமக்குத் தெரியவில்லை.
நமது பரம்பரை எதிரிகளான சங்கிகள் எங்கும் ஊடுருவும் நிலை யில், தமிழ் நாடு அரசும் மாண்புமிகு தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களும் இதில் தங்கள் பார்வையைச்செலுத்த அன்புடன் வேண்டுகிறோம்.
முனைவர் வா.நேரு,
மாநிலத் தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
No comments:
Post a Comment