நாகர்கோவில், செப்.9- குமரி மாவட் டத்தில் வியாழக்கிழமை 2ஆவது நாளாக அகஸ்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் காந்தி நடைப்பயணம் மேற் கொண்டார். சுசீந்திரம், நாகர்கோவில் வரும் வழியில் சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித் தனர்.
இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் நடைப் பயணம் துவங்கிய பின் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, அகஸ்தீஸ்வரம் விவேகா னந்தா கல்லூரிக்கு வந்து கேரவன் வேனில் தங்கினார். இதைப்போல் அவருடன் நடைப்பயணம் மேற் கொள்ளும் மேலும் 119 பேரும் கேர வனிலே தங்கினர். 2 ஆவது நாள் நடைப்பயணத்தை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து நேற்று (8.9.2022) காலை 7.15 மணி யளவில் ராகுல் காந்தி தொடங்கினார். அப்போது அவரை மூத்த காங்கிரஸ் நிர்வாகியான குமரி அனந்தன் சந் தித்துப் பேசினார். அவரது உடல் நலம் குறித்து ராகுல் காந்தி விசாரித் தார்.
தேசியக் கொடியை ஏந்தியாவாறு நடைப்பயண குழுவினருடன் ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது சாலையோரம் நின்ற பொதுமக்கள், மாணவ, மாணவியர் கள் ராகுல் காந்தியை பார்த்து உற் சாகமாக கையசைத்தனர். இதனால் அவர்கள் அருகில் சென்று பேசினார். ஒரு மணி நேரத்தில் கொட்டாரம் சந்திப்பை நடைப்பயண குழுவினர் அடைந்தனர்.
அங்கிருந்து பொற்றையடி, ஈத் தங்காடு, வழுக்கம்பாறை வழியாக காலை 10.30 மணியளவில் சுசீந்திரம் எஸ்.எம்..எஸ்.எம். பள்ளியை அடைந்தார். அவர் வரும் வழியில் சாலையோரம் நின்ற மக்கள் ராகுல் நடைப்பயணத்தை ‘செல்பி' எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொண்டர்கள் வழங்கிய இளநீரை நடைப்பயணத்தின்போது வாங்கி பருகினார்.
ராகுல் காந்தியுடன் நடைப் பய ணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி, சத்தீஸ்கர் முதல மைச்சர் பூபேஸ் பாகல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், மேனாள் ஒன் றிய அமைச்சர் சிதம்பரம், மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், ஜோதி மணி, செல்லகுமார், ஜெயக்குமார், திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப் பினர்கள் ரூபிமனோகரன், ராஜேஷ் குமார், பிரின்ஸ், விஜயதரணி, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
ஓய்விற்கு பின்னர் மாலை 4 மணியளவில் சுசீந்திரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி மற்றும் குழுவினர் நாகர் கோவில் கோட்டாறு சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக மாலையில் ஸ்காட் கல்லூரியை அடைந்தனர்.
3 ஆவது நாள் நடைப்பயணத்தை இன்று ராகுல் காந்தி ஸ்காட் கல்லூரி யில் இருந்து தொடங்குகிறார். அவர் பார்வதிபுரத்தில் இருந்து திருவனந்த புரம் தேசிய நெடுஞ்சாலை பகுதி யான சுங்காங்கடை, வில்லுக்குழி வழியாக புலியூர்குறிச்சியை அடை கிறார். அங்கிருந்து தக்கலை மேட் டுக்கடை மசூதி வழியாக முளகுமூடு புனித மேரி அய்சிஎஸ்இ பள்ளியை அடைகிறார்.
4 ஆவது நாள் நடைப்பயணம்: 10 ஆம் தேதி முளகுமூட்டில் இருந்து துவங்கி மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியை மதியம் அடைகிறது. அங்கிருந்து மாலையில் குழித்துறை சந்திப்பு, படந்தாலுமூடு வழியாக கேரள பகுதியான தலைச்சன் விளையை அடைகிறது.
ராகுல் காந்தி நடைப்பயண குழு வினருடன் வழிப்பாதையில் அதிக மான காங்கிரஸ் தொண்டர்களும், இளைஞர்களும் இணைந்தனர். காங் கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத் தும் வகையிலும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யும் விதத்திலும் ராகுல்காந்தி எம்.பி. `பாரத் ஜோடோ யாத்ரா` என்னும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை 7.9.2022 அன்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கினார். நடைப் பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து 12 மாநிலங்கள் வழியாக 150 நாள்களில் 3500 கிலோ மீட்டர் தூரம் நடைப் பயணம் மேற்கொண்டு காஷ் மீரை அடையவுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment