தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் எழுச்சியுடன் நடத்திட முடிவு
தஞ்சாவூர், செப். 22- பெரியார் பேருரையாளர் பெரும்புலவர் ந.இராமநாதன் அவர் களின் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து திராவிடர் கழகம், மற்றும் சித்திரக்குடி முக்கிய பிரமுர்கள் கலந்து ரையாடல் கூட்டம் 21.9.2022 புதன் காலை 10 மணியளவில் தஞ்சாவூர் கீழராஜ வீதி, பெரியார் இல்லத்தில் நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்று தஞ்சை மாநகர கழக தலைவர் ப.நரேந்திரன் உரையாற்றினார். தஞ்சை மாவட்ட கழகத்தலைவர் வழக்குரைஞர் சி.அமர் சிங் தலைமையேற்று விழா ஏற்பாடுகள் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து கரந்தை தமிழ்ச்சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சு.செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கழக அமைப்பாளர் மா.வீரமணி, திருவையாறு ஒன்றிய கழக தலைவர் ச.கண்ணன், தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாநில இளைஞரணி கழக துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர். மா.அழகிரிசாமி, கழக கிரா மப் பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாவட்ட கழக துணைச் செயலாளர் அ.உத்திராபதி, மண்டல கழக தலைவர் மு.அய்யனார், சித்திரக்குடி ப.ஆண்ட வர், சித்திரக்குடி சு.கலைக்கோவன், மாநில கழக அமைப்பாளர் இரா.குண சேகரன், பொறியாளர் சித்திரக்குடி சு.பழநிராசன், கழகப் பொதுச் செயலா ளர், இரா.ஜெயக்குமார் ஆகியோர் நூற்றாண்டு விழாவினை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்து கருத்துரையாற்றி னார்கள். மாநகர செயலாளர் அ.டேவிட் நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் - 1
பெரியார் பேருரையாளர் பெரும் புலவர் ந.இராமநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வை தஞ்சாவூ ரில் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கிய தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் - 2
பெரியார் பேருரையாளர் பெரும் புலவர் ந.இராமநாதன் அவர்களின் நூற்றாண்டு விழாவை 30, 09 - 2022 அன்று தஞ்சாவூரில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரிய்ர கி.வீரமணி அவர்கள் தலைமையில் மிக எழுச்சியுடன் நடத்துவது என தீர் மானிக்கப்படுகிறது.
தீர்மானம் - 3
பெரியார் பேருரையாளர் பெரும் புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழா குழு கீழ்கண்டவாறு அமைக்கப் படுகிறது.
பெரும் புலவர் ந.இராமநாதன்
நூற்றாண்டு விழா குழு
புரவலர் : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
தலைவர் : சி.அமர்சிங் - தஞ்சை மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்
செயலாளர் : பொறியாளர் சு.பழநி ராசன் - சித்திரக்குடி
பொருளாளர்: முஅய்யனார், தஞ்சை மண்டல கழக தலைவர்
துணைத் தலைவர்கள்:
இரா.ஜெயக்குமார் - பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்
புலவர் இரா.கலியபெருமாள்-தஞ்சை
செயலாளர் நாவலர்.ந.மு.வே.நாட்டார் கல்லூரி.
துணைச் செயலாளர்கள் : இரா.குணசேகரன் - மாநில அமைப்பா ளர், திராவிடர் கழகம்
இரா.சுந்தரவதனம் - செயலாளர், கரந்தை தமிழ்ச்சங்கம்
உறுப்பினர்கள் : வெ.ஜெயராமன் காப்பாளர்
க.இளவரசன் ஆவடி மாவட்ட செய லாளர்
அ.அருணகிரி தஞ்சை மாவட்ட செயலாளர்
சு.செந்தமிழ்செல்வன்-நிறைவேற் றுக்குழு உறுப்பினர், கரந்தை தமிழ்ச் சங்கம்
முனைவர் அதிரடி க.அன்பழகன் கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்
க.குருசாமி - தஞ்சை மண்டல செயலாளர்
புலவர் மா.கந்தசாமி - தஞ்சை
வி.விடுதலைவேந்தன் - நாவலர். ந.மு.வே.நாட்டார் கல்லூரி
ப.ஆண்டவர் - சித்திரகுடி
முனைவர்.ப.கண்ணன் - சித்திரகுடி
திருக்குறள் எஸ்.சோமசுந்தரம் - தஞ்சை
இரா.ரெத்தினகிரி - தஞ்சை
பெ.மருதவாணன் - தஞ்சை
சு.கலைக்கோவன் - சித்திரக்குடி
மா.வீரமணி - மாவட்ட அமைப்பாளர்
பெ.அன்பரசு - பழமாநேரி
மா.அழகிரிசாமி -மாநில ஊடகத் துறைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
கோபு.பழனிவேல் - மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
வ.ஸ்டாலின் - பொதுக்குழு உறுப் பினர்
ச.சித்தார்த்தன் - மாநில கலைத்துறை செயலாளர்
இரா.வெற்றிகுமார்-மாநில இளைஞ ரணி துணைச்செயலாளர்
இரா.செந்தூரபாண்டியன்- மாநில மாணவர் கழக அமைப்பாளர்
ச.அழகிரி - மாவட்ட தலைவர், பகுத் தறிவாளர் கழகம்
பேராசிரியர் ந.எழிலரசன் - கரந்தை கலைக்கல்லூரி
அல்லூர் இரா.பாலு - பூதலூர் ஒன்றிய தலைவர்
ரெ.புகழேந்தி - பூதலூர் ஒன்றிய செயலாளர்
வ.சுந்தரமூர்த்தி - தஞ்சை வடக்கு ஒன்றிய அமைப்பாளர்
அ.உத்திராபதி - மாவட்ட துணைச் செயலாளர்
ச.கண்ணன் - திருவையாறு ஒன்றிய தலைவர்
துரை.ஸ்டாலின் - திருவையாறு ஒன்றிய செயலாளர்
இரா.சேகர் - தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்
நெல்லுப்பட்டுஅ.இராமலிங்கம்-தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்
ப.சுதாகர் - தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர்
க.அரங்கராஜன் - தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர்
ப.நரேந்திரன் - தஞ்சை மாநகர தலை வர்
அ.டேவிட் - தஞ்சை மாநகர செயலா ளர்
முனைவர் வே.இராஜவேல்-மண்டல இளைஞரணி செயலாளர்
பாவலர். பொன்னரசு - மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்.
செ.தமிழ்செல்வன் - தஞ்சை மாநகர அமைப்பாளர்.
No comments:
Post a Comment