சென்னை, செப்.9 பொறியியல் கல்லூரி மூலம் ஒரு பரிமாற்ற மாணவராக வெளி நாட்டிற்குச் செல்வது மாணவர்களின் எதிர்கால இலக்குகளில் குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களது வாழ்க்கையை வளப்படுத்தும் அனுபவமாகவும் இருக்கும்.
சிமேட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 60 மாணவர்கள் இங்கிலாந்து, மலேசியா, துபாய் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பன்னாட்டு பாடநெறி, வெளிநாட்டு செமஸ்டர் திட்டம் மற்றும் கல்விப் பயணம் போன்ற பல்வேறு திட்டங்களுக்குச் செல்கின்றனர்.
பன்னாட்டு படிப்புகளில், அங்கீகரிக்கப் பட்ட மாற்று நடைமுறையைப் பயன்படுத்தி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பெறப்படும் கிரெடிட் சிமேட்ஸ் கிரெடிட் முறைப்படி மாற்றப்பட்டு இப்பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பு திட்டத்திற்கான வரவாக ஏற்றுக்கொள்ளப்படும் என இக் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment