மகாராட்டிர மாநிலம் மும்பையில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. அங்குதானே பிள்ளையார் ஊர்வலத்திற்கு வித்திட்டவர் திலகர்.
கடந்த 9 ஆம் தேதி விநாயகர் பொம்மைகளைக் கடலில் கரைத்தனர் (கடவுளின் பரிதாபத்தைக் கேளுங்கள்! கேளுங்கள்!!).
அந்த நிலையில்,, சிவசேனா - சிவசேனா அதிருப்திக் குழுவினர்களுக்குகிடையே பெரும் மோதல் வெடித்து அடிதடி தூள் கிளப்பியது. துப் பாக்கிச் சண்டை வரை நடந்திருக்கிறது.
அடுத்த மாதம் தசரா ஊர்வலம் நடக்கிறதாம்!
அது இன்னும் பயங்கரமாக வெடிக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது. விநாயகனுக்கு விக்னேஸ்வரன் என்று பெயர். அதன் பொருள் - ‘விக்னம்' (கஷ்டம்) இல்லாமல் காப்பாற்றுவது என்று பொருள். ஆனால், அந்த விக்னேஸ்வர் ஊர்வலத் திலேயே துப்பாக்கிப் பிரயோகம் வரை நடந்துள்ளதே, இவர்தான் விக்னேஸ்வரரா?
No comments:
Post a Comment