திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் சிட்டு போல் பறந்து கழகத் தொண் டாற்றிய செக்காப்பட்டியைச் சேர்ந்த அருமைத் தோழர் 'சின்னாளப்பட்டி மணி' என்கிற சுப்பிரமணி (வயது 91) இன்று (10.9.2022) காலை உடல்நலக் குறைவினாலும், முதுமையாலும் மறைந்தார் என்ற செய் தியை மாவட்டத் தலைவர் தோழர் வீரபாண்டியன் அவர்கள் வாயிலாக அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும், துன்பமும் அடைந்தோம்!
எளிமை நிறைந்த அந்தத் தொண்டறச் செம்மல் ஆர்வத்துடன் கூட்டங்களில் புத்தகங்களை மக்களிடையே பரப்பிடச் சிட்டெனப் பறப்பார்!
எதையும் கேட்கவே மாட்டார்.
(இவர் போலவே மறைந்த சேலம் தோழர் அப்பாய். புத்தகப் பரப்பாளர்கள் இவர்கள்).
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சின்னாளப்பட்டி மணி என்கிற சுப்பிரமணி அவர்களுக்கு நமது வீர வணக்கம்!
சின்னாளப்பட்டி மணி, சேலம் அப்பாய் ஆகிய முதுபெரும் தொண்டர்களது பெயர்கள் திருச்சி பெரியார் மாளிகை புத்தக மய்ய வளாகத்திற்குச் சூட்டப்படும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத் தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் நமது ஆறுதலையும், இரங்கலையும் உரித்தாக்குகிறோம்.
குறிப்பு: மாவட்டத் தலைவர் தோழர் வீரபாண்டியன் கழகத் தோழரின் இறுதி நிகழ்ச்சியை நடத்துவார்.
தொடர்புக்கு: 7418912698
No comments:
Post a Comment