திருப்பூர், செப். 4 ராகுல் காந்தியின் நடைபயணம் மக்கள் மத்தியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒன்றிய தகவல் ஒலி பரப்புத்துறை, மீன்வளம், கால் நடை மற்றும் பால் வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று (3.8.2022) திருப்பூரில் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொழில் துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற் றார்.
பின்னர் அவர் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறிய தாவது:- காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இந்தியாவில் யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. ராகுல்காந்தி நடை பயணம், பிரச்சார பயணம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவ தில்லை. மக்கள் மத்தியில் தாக் கத்தை ஏற்படுத்தாது. சட்டம், ஒழுங்கை பரா மரிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. காவல்துறை மாநில அரசின் கையில் உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா விற் பனை பரந்து விரிந்துள்ளது. கஞ்சா போன்ற போதைப் பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர்கள் இந்திய அரசமைப்பு சட்டப்படி மாநில அரசுக்கு தேவை யான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment