பாஜக ஆளும் உ.பி.யில் நண்பர்களுடன் பேசிய சிறுமி கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

பாஜக ஆளும் உ.பி.யில் நண்பர்களுடன் பேசிய சிறுமி கொலை

லக்னோ, செப். 9- பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது மகள் அவளின் நண்பர்களுடன் பேசியதைத்தொடர்ந்து பெற் றோராலேயே கொல்லப்பட்டு உள்ளார். 

 மீரட் பகுதியை சேர்ந்தவர்கள் பப்லூ -- ரூபி இவர்களுக்கு சவுமியா என்ற 10 வயது மகள் உள்ளார். இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளி யில் 5ஆம் வகுப்பு படித்து வந் திருக்கிறார். இந்த சிறுமியின் வகுப்பில் ஆண் நண்பர்கள் அதி கம். இந்த நிலையில் சிறுமியின் தந்தைக்கு அவர் ஆண்களுடன் பேசுவது பிடிக்கவில்லை. இதனால் சிறுமியை பலமுறை கண்டித்துள்ளார். மேலும் அவர் இனி வேறு ஆண்களுடன் பேசவே கூடாது என்று கண் டித்துள்ளார். இதனால் சிறுமி தனது நண்பர்களுடன் பேசு வதை தவிர்க்கத் தொடங்கி யுள்ளார்.

ஆனால் படிப்பில் கெட்டிக் காரியான இவரிடம் வகுப்பு நண்பர்கள் சந்தேகம் கேட்பது வழக்கம். இது வகுப்பில் மட்டு மல்லாமல் வீட்டிற்கு வந்ததும் பாடம் தொடர்பாக அலை பேசியிலும் உரையாடுவார். இதனை கண்ட அவரது தந்தை, தாயையும் கண்டித்துள்ளார். சிறுமியின் தாயும் சிறுமியிடம் இனி ஆண் நண்பர்களுடன் பழ கக் கூடாது என்று பொறுமை யாக கூறியிருக்கிறார்.

ஆனால் அவர்களை தவிர்க்க முடியாது சிறுமி மீண்டும் பேசி வந்துள்ளார். இதனால் கோப மடைந்த பெற்றோர் மகளையே கொலை செய்ய திட்டமிட்டுள்ள னர். அதன்படி இரவு மகளை உணவகத்துக்கு சாப்பிட அழைத்து சென்ற பெற்றோர், சுமார் 10 மணியளவில் அந்த பகுதியில் இருக்கும் யமுனா கால்வாய் மேம்பாலத்துக்கு அழைத்து சென்று அவரை தூக்கி கால்வாயில் வீசினர். இதில் தண்ணீரில் விழுந்த சிறுமி மூச்சுத் திணறி நீரில் மூழ்கி பரி தாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சிறுமியின் பெற் றோர் தங்கள் மகளை காண வில்லை என்று காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது விசாரணை மேற் கொண்டதில் பெற்றோர் நட வடிக்கையில் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின் னர் அவர்கள் நடத்திய கிடுக்கிப் பிடி விசாரணையில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சிறு மியை கொன்ற பெற்றோரை காவல்துறையினர் கைது செய்த தோடு, சிறுமியின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். இந்த சம் பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment