பல முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப் பினராக இருந்தவரும், சீரிய திராவிட இயக்க இன உணர்வாளருமான நண்பர் சேடப்பட்டி முத்தையா அவர்கள் உடல் நலக் குறைவினால் இன்று (21.9.2022) முடிவெய்தினார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
அவரை இழந்து வருந்தும் அவரது மகன் மற்றும் குடும்பத்தாருக்கும், தி.மு.க. தோழர்களுக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.9.2022
No comments:
Post a Comment