ரயில்வே நிலம் தனியாருக்கு நீண்டகால குத்தகை: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

ரயில்வே நிலம் தனியாருக்கு நீண்டகால குத்தகை: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, செப். 9- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச் சரவை கூட்டம் டில்லியில் 7.9.2022 அன்று  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சரக்கு போக் குவரத்து நடவடிக்கைகளுக்காக ரயில்வே நிலத்தை 35 ஆண்டு கள் வரை தனியாருக்கு குத்த கைக்கு அளிக்க ஒப்புதல் வழங் கப்பட்டது. இதுவரை ரயில்வே நிலங்கள் 5 ஆண்டுகளுக்கு மட் டுமே குத்தகைக்கு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது நீண்ட காலத் திற்கு ரயில்வே நிலங்கள் குத் தகை விட முடிவு செய்யப்பட்டுள் ளது. இதற்காக ரயில்வே நிலத்தின் மதிப்பில் 1.5 சதவிகிதத்தை குத் தகை தொகையாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவதால், நாடு முழுவதும் 300 சரக்கு கையாளும் முனையங்கள் அமைய வாய்ப் புள்ளதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்க ளிடம் தெரிவித்தார். 

இதன் மூலம், ரயில்வே சரக் குப் போக்குவரத்து அதிகரிப்பது டன் தொழில்துறையின் சரக்கு போக்குவரத்திற்கான செலவு குறையும். ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும். மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம், தொலைத் தொடர்பு கேபிள், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பொதுப்பணிகள், வளர்ச்சியடை யும். மேலும் 1.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் கேரள மாநிலம் ஜே.எல்.என்.மைதானம் முதல் தகவல் பூங்கா வரையிலான கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


No comments:

Post a Comment