சென்னை,செப்.12- தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உள்ள 3,236 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கான கணினி வழித் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 12 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் ஜூலை 4-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தொடர்ந்து மொத்தமுள்ள 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப். 2 முதல் 4-ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தேர்வு வாரிய வளாகத்தில் நடைபெற்றது.
அதன் அடிப்படையில் புவியியல், இயற்பியல், வரலாறு ஆகிய பாடங்களில் ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தகுதிபெற்ற 341 பட்டதாரிகளின் பட்டியலை தேர்வு வாரியம் 10.9.2022 அன்று வெளியிட்டுள்ளது.
அதன் விவரங்களை http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். எஞ்சிய பாடங்களில் தேர்வு பெற்றவர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment