பாட்னா,செப்.1- ஒன்றியத்தை ஆளும் பாஜகவுக்கு மாற்றாக அணி அமைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா முயற்சி செய்து வருகிறார். அதேபோல், தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சி தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதற்காக அவர் பல கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். பீகாரில், முதலமைச்சராக இருந்த அய்க்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் ஆதரவுடன் மீண்டும் முதல்அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் பாட்னா சென்ற, சந்திரசேகர ராவ், நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். பகல் உணவு அருந்திய இருவரும் தொடர்ந்து ஒன்றிய, மாநில அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததுடன், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவரும், துணை முதல்அமைச்சருமாகிய தேஜஸ்வி யாதவும் உடனிருந்தார்.
No comments:
Post a Comment