செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

செய்தியும், சிந்தனையும்....!

கேள்வி: திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகம்  விடுபடுமா?

பதில்: தமிழகம் பெரியார் மண் என்று தமிழர்களைக் கழகங்கள் நம்ப வைக்கும்வரை தமிழகம் திராவிடக் கட்சிகளிலிருந்து விடுபடாது. ‘தமிழர்கள் காட்டுமிராண்டிகள்' என்று ஈ.வெ.ரா. கூறியது தமிழ் மக்களுக்கு என்று தெரிய வருகிறதோ, அன்று தமிழகம் திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுபடும்.

- ‘துக்ளக்', 14.9.2022, பக்கம் 8

இதே ‘துக்ளக்'கில் இதே குருமூர்த்திதான் இவ்வாறு பதில் சொன்னார்.

கேள்வி: தமிழக மக்கள் எந்த விஷயத்தில் தனித்துவம்?

பதில்: ஆன்மிகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிடக் கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களின் தனித்துவம்.

‘துக்ளக்', 19.2.2020, பக்கம் 29

14.9.2022 ‘துக்ளக்' குருமூர்த்திக்கு 19.2.2020 ‘துக்ளக்' குருமூர்த்தி பதலடி கொடுத்திருக்கிறார்.

இப்பொழுது ஏன் இந்த ‘அந்தர்பல்டி!' ஆன்மிகத்தில் மூழ்கினாலும், இது பெரியார் மண்தான் என்று குருமூர்த்தி ஒப்புக் கொண்ட பிறகு இந்தப் பதில் என்றால், எதைக் காட்டுகிறது?

குருமூர்த்தி அய்யர் ‘நிதானமில்லாத' குழப்பப் பேர்வழி - அப்படித்தானே!

No comments:

Post a Comment