கேள்வி: காங்கிரஸ் உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்கிற மு.க.ஸ்டாலின் மற்றும் நிதிஷ் முயற்சி மேற்குவங்க மம்தா, தெலங்கானா சந்திரசேகர ராவ், டில்லி கெஜ்ரிவால் இவர்களிடம் எடுபடுமா?
- உ. சந்தானம், ஆயிரம் விளக்கு
பதில்: முயன்றால் முடியாதது ஏதுமில்லை; 'முயற்சித் திருவினையாக்கும்' என்ற குறளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
- - - - -
கேள்வி: பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிக்காமல் எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாடாளு மன்றத் தேர்தலைச் சந்தித்தால் மக்கள் நம்பி வாக் களிப்பார்களா?
- கு. ஏழுமலை, மதுராந்தகம்
பதில்: குறைந்தபட்ச கொள்கை, வேலைத் திட்டத் துடன் அறிவித்தால் நிச்சயம் முடியும். பிரதமருக்காக வாக்களிக்காமல் கொள்கைக்காக வாக்களிப்பதே சிறந்த ஜனநாயக அரசியல் நெறிமுறையாகும்!
- - - - -
கேள்வி: இழந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்ளத் துடிக்கும் காங்கிரஸ் நடை பயணத்தை ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தன் மாநிலத்தி லேயே கொடியசைத்துத் துவக்கி வைப்பது ஏற்புடை யதா?
- நியாயவான், மாமண்டூர்
பதில்: திராவிட மாடல் ஆட்சி என்ற 'கற் கோட்டை' யின்மீது நின்றுதான் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்துத் துவக்கி வைத் திருப்பது கண்டும் ஏனோ இப்படி அர்த்தமற்ற பதற்றமும் பயமும்? தேவை தானா?
- - - - -
கேள்வி: பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டுள்ள கருநாடக மடாதிபதியைக் கண்டிப்பதில் அனைத்துக் கட்சிகளும் சுணக்கம் காட்டுவது ஏன்?
- எஸ். கோபிகிருஷ்ணன், சைதை
பதில்: அடுத்து வரவிருக்கும் அம்மாநிலச் சட்ட மன்றத் தேர்தலின் வாக்கு வங்கியைக் கருதியே!
- - - - -
கேள்வி: புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப் பட்டு பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோருவதில் உங்கள் நிலைப்பாடு என்ன?
- கோ. பெருமாள், திண்டிவனம்
பதில்: அரசு ஊழியர்களின் நலன் எந்தத் திட்டத் தின்மூலம் பாதுகாக்கப்படுமோ அதை ஆதரிப் பதே நம் நிலைப்பாடு. நாம் அரசு ஊழியர்களின் நியாயமான நிலைப்பாட்டுக்கே ஆதரவு.
- - - - -
கேள்வி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின் ‘‘ஒற்றுமை நடை பயணம்‘’ பலன் கொடுக்குமா?
- பா.முகிலன், சென்னை-14
பதில்: நிச்சயம் பலன் கொடுக்கும் - காரணம் அது ஒரு கொள்கைப் பயணம் - இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவை.
- - - - -
கேள்வி: தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணா மலையின் ஆட்டம் அதிகமாக இருக்கிறதே, இது குறித்துத் தங்கள் கருத்து என்ன?
- பா.கண்மணி, வேலூர்
பதில்: அதிக ஆட்டம் - வெற்று ஆட்டம். அரை வேக்காடுகளுக்கு ஒரு போதும் உதவி செய்யாது; உள்ளே உள்ள எதிர்ப்பை சமாளிக்கவே இந்த 'சாமி ஆட்டம்' - 'சாமி ஆட்டங்கள்' நீடித்ததுண்டா?
- - - - -
கேள்வி: தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி களும் (பாஜக தவிர) நீட் தேர்வுக்கு எதிராக ஒரே குரலாக இருந்தும் நீட்டிலிருந்து விலக்கு பெறுவதில் ஒன்றிய பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறதே?
- ச.அருட்செல்வன், பெண்ணாடம்
பதில்: ஜனநாயகத்தை - மக்களின் மகோன்னத குரலை மதிக்காத மமதைக்கு எடுத்துக்காட்டு இது!
விரைவில் விவசாய சட்டங்கள் போல போராட்டம் வெடித்தால் - தானே இறங்கி வருவர்!
- - - - -
கேள்வி: பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலை வீசுவது முற்றிலும் ஜனநாயக விரோத மல்லவா? பீகார், டில்லி, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜகவின் சித்து வேலைகள் எடுபடவில்லையே! - ஏன்?
- க.ஆற்றல்அரசி, அயப்பாக்கம்
பதில்: வித்தைகள் - எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் வெற்றியைத் தராது! சிலரை சில காலம் ஏமாற்றலாம் - ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பது இயற்கை நியதி.
No comments:
Post a Comment