சென்னை, செப்.10 வாக னங்கள் இயங்கக்கூடிய உலகின் மிக உயரமான மனாலி-லே நெடுஞ்சாலை 3S தொடு முனை அமைவிடத்தில் டைம்ளர் நிறுவனம் PAL டிரக்கிங் என்ற பெயரில் பாரத்பென்ஸ் நிறுவனம் தனது விற்பனை, பழுதுபார்ப்பு மற்றும் உதிரிப் பாகங்கள் சேவையை தொடங்கியுள்ளது.
இமயமலையின் அதிக உயரமான இடங்களில் மற்றும் அதன் வழியாக பயணிக்கிற வர்த்தக வாகனங்களுக்கு முழு மையான தீர்வுகளை இச்சேவை மய்யம் வழங்கும்.
சிறப்பான விற்பனை ஆலோசனை மற்றும் மிக நவீன 'புரோசர்வ்' என்ற விற்பனைக்கு பிந்தைய ஆதரவு சேவையை வாடிக்கையாளர்கள் உத்தரவாதத் துடன் இங்கு பெற முடியும். இந்த மிக நவீன 3S அமைவிடம் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட தொழில் நுட்ப பணியாளர்களையும் மற்றும் மொபைல் சர்வீஸ் வேன்களையும் கொண்டதாக இருக்கிறது என அந்நிறுவன சேவைப் பிரிவின் துணைத் தலைவர் ராஜாராம் கிருஷ்ணமூர்த்தி தெரவித்துள் ளார்.
No comments:
Post a Comment