தமிழ்மாமணி முனைவர் க.தமிழமல்லன் எழுதிய ‘தனித்தமிழ் இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு' என்னும் நூல் வெளியீட்டுவிழா புதுவை பார்வதி திருமண மண்டபத்தில் தனித்தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்தென்றல் வரவேற் புரை நிகழ்த்தினார். சீனு.மோகன்தாசு முன்னிலையுரையாற்றினார். புதுவை மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, ஆணையர்கள் த.தியாகராசன், இராசரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நூலை வெளியிட்டுப் பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் துரை.இரவிக்குமார், ஆணையர் தியாகராசன், ஆணையர் இராசரத்தினம் போன்ற பலர் நூலைப் பெற்றுக்கொண்டனர். முனைவர் க.தமிழமல்லன் ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியில் யாழ்த்தமிழன் நன்றி கூறினார்.
Sunday, September 11, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment