ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணம் - வெற்றி வாகை சூடட்டும்! - தமிழர் தலைவர் வாழ்த்து - - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணம் - வெற்றி வாகை சூடட்டும்! - தமிழர் தலைவர் வாழ்த்து -

அ.இ. காங்கிரசின் மேனாள் தலைவரும், மக்களவை உறுப்பினரும் - இளையோர் உலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமும் - சங் பரிவார் சக்திகளுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு ஏவுகணையாக ஒளிருபவருமான மதிப்பிற் குரிய ராகுல் காந்தி அவர்கள், குமரி தொடங்கி காஷ்மீர்வரை ‘‘இந்திய ஒற்றுமை'' என்ற நோக்கில் மேற்கொண்டிருக்கும் நடைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

மதம், ஜாதி, மொழியின் பெயரால் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் பாசிச சக்திகளை எதிர்க்கும் அவரின் உரத்த குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு களான மதச்சார்பின்மை, சமூகநீதி, சமதர்மம்,  இறையாண்மை, ஜனநாயகம் இவற்றிற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத் தலை முறியடித்து, நாட்டை நாசகார சக்திகளிடமிருந்து விடுவிக்க திரு.ராகுல்காந்தி அவர்கள் மேற்கொண் டுள்ள நடைப்பயண வெற்றிக்கு நம் கைகளையும் இணைப்போம்!

நடைப்பயணம் வெற்றி பெறட்டும்!

அதன் நோக்கம் முற்றிலும் நிறைவேறட்டும்!

வாழ்த்துகள்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.9.2022


No comments:

Post a Comment