பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பு அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 20, 2022

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பு அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

திருச்சி, செப். 20- பெரியார் நூற் றாண்டு கல்வி வளாக பணித் தோழர்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் விழா 16.09.2022 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றிய பணித்தோழர்க ளுக்கு பெரியார் கல்விக் குழுமத் தின் பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. 

இவ்விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் முனைவர் வனிதா, பெரியார் மணியம்மை பெண் கள் மேல்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் பாக்யலட்சுமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித்தோழர்கள் கூட் டமைப்பின் தலைவர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சிறப் பாக நடத்தினார். கூட்டமைப் பின் பொருளாளர் செல்வி நன்றி கூறினார். 

பெரியார் பிறந்தநாள் கொண் டாட்டத்தின் ஒருபகுதியாக அன்றைய மாதம் பிறந்தநாள் கொண்டாடும் கல்வி நிறுவன பணியாளர்களின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட் டது. மேலும் கலந்து கொண்ட 250க்கும் மேற்பட்ட பணியாளர் களுக்கு தேநீர், இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் நாகம்மையார் குழந்தைகள் இல்ல பொறுப் பாளர் அலமேலு அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது. 

பாராட்டப்பட்ட பணித் தோழர்கள் பெரியார் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment