அரியலூர் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

அரியலூர் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு பாராட்டு

கழகப் பொதுச் செயலாளர்கள் பங்கேற்பு

அரியலூர், செப். 11-  அரியலூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அரியலூரில் மாவட்ட தொழிலாள ரணி தலைவர் சிவக்கொழுந்து இல்லத்தில் 8.9.2022 அன்று நடைபெற்றது. இதில் 30.7.2022 அன்று அரியலூரில் நடை பெற்ற மாநில இளைஞரணி மாநாட்டு வரவு செலவு அறிக்கை ஒப்படைக்கப்பட்டு, மாநாட்டுக்கு உழைத்த தோழர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது.

இதில், மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன் வர வேற்று பேசினார். 

தனித்தன்மையை காட்டிய மாநாடு :

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்று பேசினார். அப்போது, "மாநாட்டு தொடக்க ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும்போதே மாநாட்டு வெற்றி விழா கலந்துரை யாடலுக்கு வருவேன் என்று கூறினேன். மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. கரோனா பெருந்தொற்றால் என்னால் மாநாட்டுக்கு வரமுடியாததால் மிகுந்த வருத்த மடைந்தேன். ஆனாலும், காணொலி வழியாக மாநாட்டை நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அதனை உலகம் முழுவதும் அனுப்பினேன். காணொலியைப் பார்த்த பலரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் பார்த்து வியந்து என்னிடம் பேசினர். நமது தனித்தன்மையை காட்டும் மாநாடாக அமைந்தது. இனி எங்கு மாநாடு நடந்தாலும் அரியலூர் மாவட்டத் தோழர்கள் ஆலோசனை வழங்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றீர்கள். இந்த மாநாடு வெற்றிபெற உழைத்த அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

நூறு கிளைக்கழகங்களை 

ஏற்படுத்த வேண்டும் :

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசும்போது: "கழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று இருக்கக் கூடிய மாநாடாக இளைஞரணி மாநாடு அமைந்தது. தஞ்சை மாவட்டத்தில் எப்படி தந்தை பெரியார் அவர்கள் ஊர் ஊராகச் சென்று பேசினாரோ, அதேபோல் அரியலூர் மாவட்டத்திற்கும் அத்தகைய சிறப்புகள் உண்டு. இந்நிலையில் மதவெறியர்கள் அரியலூர் மண்ணை கபளீ கரம் செய்வதற்கு துடிக்கிறார்கள். அதற்கு எதிர்வினையாகத் தான் நம்முடைய தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரியலூரில் மாபெரும் மாநாட்டை நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கினார். மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும். அரி யலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் உடனடியாக நூறு கிளைக் கழகங்களை உருவாக்க வேண்டும்.  டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட்ட நமது மாவட்டத்துக்கான விடுதலை சந்தா இலக்கை அடைய ஒவ்வொரு தோழர்களும் பாடுபட வேண்டும்" என தெரிவித்தார்.

நமது வலிமையை காட்டிய மாநாடு :

கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலை வகித்து பேசினார். அப்போது, "விடுதலை சந்தா சேர்ப்பு பணியோடு மாநாட்டு பணிகளையும் கவனித்து வந்தோம். மற்ற மாவட்டங்களில் நடந்திருந்தால் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் மாநாட்டு பணிகளுக்காக சென்றிருப்பார் கள். ஆனால் அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தளவில் அந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்களே கடைவீதி வசூல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மிகச் சிறப்பாக செய்து முடித்தனர். ஒவ்வொரு தோழர்களும் தங்களுடைய சொந்த விழாவாக நினைத்து செயல்பட்டது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றது  நமது இயக்கத்தின் வலிமையை காட்டுவதாக அமைந்தது. மற்ற மாநாடுகளை காட்டிலும் இந்த மாநாட்டில்தான் அதிக அளவில் வாகனங்கள் வந்திருந்ததை நமது நிழற்படக்கலைஞர் பா.சிவகுமார் தனி படமெடுத்து விடுதலையில் பதிவிட்டு இருந்தார். அந்த அளவிற்கு சிறப்பாக இந்த மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். மாநாட்டிற்காக உழைத்த அரியலூர் மாவட்ட தோழர்களுக்கும், மாநிலம் முழுவதும் மாநாட்டில் பங்கேற்ற தோழர்களுக்கும், மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஒத்துழைத்த அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மண்டலத் தலைவர் பொறியாளர் கோவிந்தராசன், மண்டலச் செயலாளர் சு.மணிவண்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா.தம்பி பிரபாகரன், மண்டல இளைஞரணி செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.அறிவன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, செல்லமுத்து, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தங்க சிவமூர்த்தி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சிவக்கொழுந்து, மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் இளவரசன், மாவட்ட துணைச் செயலாளர் சங்கர், அரியலூர் ஒன்றிய தலைவர் மருதமுத்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், செந்துறை ஒன்றிய தலைவர் முத்தமிழ்ச்செல்வன், செந்துறை ஒன்றிய செயலாளர் இராசா.செல்வகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில், திருமானூர் ஒன்றிய தலைவர் சிற்றரசு, செந்துறை சேகர், தா.பழூர் ஒன்றிய தலைவர் இராமச்சந்திரன், ஒன்றிய செயலா ளர் வெங்கடாசலம், செந்துறை இளவழகன், அரியலூர் நகர தலைவர் மதியழகன், ஆண்டிமடம் பன்னீர்செல்வம், செந்துறை அன்பழகன், செந்துறை சுப்புராயன், திருமானூர் நகர தலைவர் சேகர், மேகலா அச்சகம் மேகலா பாண்டியன், ஆசிரியர்கள் வெங்கடேசன், சந்திரசேகரன், தஞ்சை மாநகர தலைவர் நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் டேவிட் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இரங்கல் தீர்மானம்

மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச் செல்வன் தாயார் தனலட்சுமி அம்மையார், மருவத்தூர் இரா.அறிவழகன் ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மானம் 2 : 

அரியலூரில் ஜூலை 30 அன்று மாநில இளைஞரணி மாநாடு மற்றும் பேரணி சிறப்பாக நடத்திட உழைத்திட்ட, துணை நின்ற கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களுக்கும், நன்கொடை அளித்து உதவிய அனைவருக்கும், மாநாட்டின் மாபெரும் வெற்றிக்கு துணையாக இருந்து உதவிய மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களுக்கும், மாநாடு அரியலூரில் நடைபெற வாய்ப்பு அளித்ததுடன் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றிய கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றியை இக்கூட்டம் உரித்தாக்குகிறது.

தீர்மானம் 3: 

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் பட ஊர்வலம், மேளதாளம், இனிப்பு வழங்குதல், கழகக் கொடி ஏற்றுதல், பெரியார் பேச்சு - பாடல் ஒலிபரப்புகள் என சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: 

அரியலூரில் ஜூலை 30 அன்று நடைபெற்ற மாநில இளைஞரணி மாநாடு வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டு கமிட்டியினர் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

வரவு-செலவு விவரம்:

மொத்த வரவு - 20,14,670

மொத்த செலவு - 18,64,670

இதில் ஆகஸ்ட் 12 அன்று திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மீதத் தொகை 1 இலட்சம் வழங்கப்பட்டது.

மேலும், கடை வீதிகளில் இளைஞரணியினரால் திரட்டப் பட்ட நன்கொடையில் செலவு போக மீதமிருந்த ரூ.50,000 - 25 ஆண்டு விடுதலை சந்தாவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சென்னையில் செப்.6 ஆம் தேதி நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவில் மாநாட்டுக்கு உழைத்தத்  தோழர் களுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கருப்பு சட்டைத்துணி போர்த்தி இனிப்புகள் வழங்கி சிறப்பு செய்தார்.

உணவு வழங்கியத் தோழர்களுக்கு பாராட்டு

மேலும், மாநாட்டில் கலந்து கொண்ட தோழர்களுக்கு புலால் உணவு வழங்கிய ஆசிரியர்கள் சந்திரசேகரன், வெங்க டேசன், பொன்.செந்தில்குமார் ஆகியோருக்கு பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

விருந்து உபசரிப்பு :

மாநாட்டில் உழைத்தத் தோழர்களுக்கு கலந்துரையாடல் கூட்டத்தன்று மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தங்க.சிவமூர்த்தி இரவு சிற்றுண்டி விருந்து வழங்கி சிறப்பித்தார்.

 அரியலூர் ஒன்றியச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment