நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு பெண்ணின் வலி இது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு பெண்ணின் வலி இது!

“கடந்த 20 ஆண்டுகளாக என்னைத் தொடர்ந்த அதிர்ச்சி மீண்டும் எனது உடல் முழுவதும் பரவியது. எனது வாழ் வையும், எனது குடும்பத்தையும் சீரழித்த, எனது 3 வயது மகளை என்னிடமிருந்து பறித்த 11 குற்றவாளிகள் சுதந்திரமாக நடந்து சென்றனர். நான் வார்த்தைகளை இழந்தேன். நான் இன்னமும் மரத்துப் போயுள்ளேன்.

இன்று என்னால் இதுமட்டும்தான் சொல்ல முடியும். ஒரு பெண்ணுக்கு வழங் கப்பட்ட நீதியை எப்படி இப்படி ஒரு முடி வுக்குக் கொண்டு வர முடியும்? நான் நமது நாட்டின் உச்சபட்சமான நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைத்தேன். நமது அமைப்பின் மீது நம்பிக்கை வைத்தேன். எனது அதிர்ச்சியிலிருந்து மீண்டு வாழ வெகுவாகப் பயின்று வந்தேன். இந்தக் குற்றவாளிகளின் விடுதலை எனது அமை தியை என்னிடமிருந்து பறித்துவிட்டது. நீதித்துறையின் மீதான எனது நம்பிக் கையைக் குலைத்துவிட்டது. எனது துயர மும், எனது அலைபாயும் நம்பிக்கையும் எனக்கு மட்டுமானது அல்ல. நீதிமன்றத் தில் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக் கும் ஒவ்வொரு பெண்ணுக்குமானது.

இவ்வளவு பெரிய அநீதியான தீர்ப்பை வழங்குவதற்கு முன், எனது பாதுகாப்பைப் பற்றியும், எனது நலன் குறித்தும் யாரும் விசாரிக்க முன்வரவில்லை. நான் குஜராத் அரசிடம் வேண்டுவது, இந்தத் தீங்கான முடிவைத் திரும்பப் பெறுங்கள். அச்ச மின்றியும், அமைதியாகவும் வாழும் எனது உரிமையைத் திரும்பத் தாருங்கள். எனது குடும்பமும் நானும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

- பல்கீஸ் பானு


No comments:

Post a Comment