'தகைசால் தமிழ்ச் சான்றோர்' விருது சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

'தகைசால் தமிழ்ச் சான்றோர்' விருது சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது

ஈரோடு, செப். 12- ஈரோட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் "மக்கள் சிந்தனைப் பேரவை" என்னும் அமைப்பு அரசியல் சார்பற்ற நிலையில் சென்ற 18 ஆண்டுகளாகச் சமூகப் பணியும், கல்விப்பணியும் செய்து  வருகிறது. 

அதன் சார்பாக இவ்வாண்டு நடைபெற்ற புத்தகச் சந்தைத் திருவிழாவில் பன்னாட்டுத் தமி ழரங்கம் நடைபெற்றது. மலே சியா, சிங்கப்பூர், அமெரிக்கா, தென்கொரியா, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், மாலத் தீவு, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுக ளிலிருந்து வந்த 10 தமிழ் ஆளு மைகள் பங்கேற்றனர். 

முனைவர் சுப.திண்ணப்பன் தலைமையில் சிறப்பு இணை அமர்வு ஒன்று நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி பற்றிய சிந்தனை கள், செயல்கள் பற்றிப் பங்கு பெற்றோர் பேசினர்.  பின்னர் தொழிலதிபர்  சி.தேவராஜன் தலைமையில் பன்னாட்டுத் தமிழரங்கம் நடைபெற்றது. மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேக ரன் வரவேற்புரை ஆற்றினார். 

வந்திருந்த 10 ஆளுமைகளும் உரையாற்றினர். இவர்கள் புடைசூழச் சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பனார் செய்த தமிழ்ப் பணிகளைப் பாராட்டி அவருக்குத் 'தகைசால் தமிழ்ச் சான்றோர்' என்னும் விருது வழங்கப்பட்டது. முனை வர் சுப.திண்ணப்பனார் தம் ஏற் புரையில் இந்த விருது வழங்கிய காலம், இடம் முன் நோக்குத் திட்டம் ஆகியவற்றின் சிறப்பு களை எடுத்துக் கூறியதுடன் வள்ளுவர் வழங்கும் 'நூல்' பற்றிய சிறப்புகளையும் சுருக்கமாக விளக்கிப் பேசினார். பொதுமக் கள் மாணவர்கள் என 2000 பேருக்குமேல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment