பெண்களின் பொதுவெளிகள்-இன்றைய நிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

பெண்களின் பொதுவெளிகள்-இன்றைய நிலை

பகுத்தறிவு சமூகத்தில் அதிகமாக பெண்களின் உரிமையும் உணர்வுகளும் சேர்த்து. பேசப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்...  பதினெட்டாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்கள் இன்னும் பெண்கள் மீது சுமத்தி வைத்திருப்பதை கவனித்து பார்த்தால் விளங்கும்.  நவீன காலத்தில் மனித இனத்தில் சரி பாதி பெண்கள். அவர் கள் திறமைகளை முழுக்க வெளிக்கொண்டு வர முடியாமல் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் பெண்களின் பங்களிப்பும் சம விகிதத்தில் இருக்க வேண்டும். அதுதானே உண்மை!  நாடு பின்தங்கியுள்ளதற்கு முழுமுதற் கார ணம்-மனித இனத்தில் பாதி அளவு அறிவு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கிறது. 

ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் பெண்களின் மீது அடக்குமுறை அதிகம்

மேலை நாடுகளில் விகிதாசாரம் சற்று மாறுபடும் - அவ்வளவே.... காலங்காலமாக பாதுகாப்பு என்ற பெயரில் பெண் இனம் சமூகத்திற்கான நல்ல பங்களிப்புகளை தர முடியாமல் கலாச்சாரம், பண்பாடு பாரம் பரியம் என்று சொல்லியே அடக்கி வைக் கப்பட்டுள்ளார்கள்....ஆசிய,ஆப்ரிக்க நாடுகளின் பெண்கள் மீது அடக்குமுறை  மிகவும் அதிகம்.இன்னும் ஓர் உண்மை என்னவென்றால் ஒரு ஆய்வில் இந்தியா வில் உயர்கல்வி பயிலும் பெண்கள் ஆண்களை விட குறைவான சதவீதத்தில் தான் கல்விகற்க வருகிறார்கள் அப்படியே வந்தாலும் திருமணத்திற்குப் பின் வீட்டின ரால் வேலைக்கு போக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு முடிவில் குழந்தைகளை பராமரிக்க போய்விடுகிறார்கள் என்று கள ஆய்வில் தெரிய வந்துள்ளது - அதிர்ச்சி யளிக்கிற உண்மை..

மேலும் அதிகமாக யாரும் கட்டுப் படுத்தாமல் இருந்தாலும் பெண்களிடம் ஆர்வம் குறைவாகவே இருப்பதாகவும் சொல்லுகிறார்கள் அறிஞர் பெருமக்கள்... ஓரளவு படித்த பெண்கள்,  படித்தஆண்கள் தற்போது சம விகிதத்தில் இருப்பது பாராட் டத்தக்க செய்தி. ஆனால் பொது வெளி களை எப்படிப் பயன் படுத்துகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டும். பெண் கள் பொதுவெளிக்கு  எதற்காக வருகிறார் கள்  என்பதை அவர்கள் முடிவுக்கே விட்டு விடலாம். அப்படியிருக்க ஆண்கள் பொது வெளி அத்தனையும் ஒன்று விடாமல் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அதுவும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் அறிவார்ந்த  செயல்பாடுகளில் ஆண்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள் அழகுசார்ந்த விசயங்களில் மட்டுமே கவனம் கொள்வது பார்த்த உடனே தெரிந்து விடுகிறது. 

மூடப்பழக்கமில்லாத மனிதர்களை உருவாக்க வேண்டும்

அதிகமாக பெண்கள் பொது வெளி களில் தங்களை நிரப்பிக்கொள்ள வேண் டும் -  அறிவுபூர்வமாக இருக்கும் பெண்கள்  எதிர்கால சந்ததிகளை வளர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு வகிக்கிறார்கள்..அப்படிப் பட்ட நல்ல வாய்ப்புகளை மூடப்பழக்க வழக்கம்  இல்லாத மனிதர்களை உருவாக்கி நல்ல சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும். 

இந்தக் காலத்தில்  பெண்கள் கல்வி கற் கிறார்கள். வேலைக்கு போகிறார்கள். பொரு ளீட்டுகிறார்கள் என்று நினைக்கலாம். அப் படி அல்ல. மிகமுக்கியமாக முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். திருமணம், குழந்தைப் பேறு போன்ற விசயங்களில் பெண்கள் நிலை பூஜ்யமாகத்தான்  இருக்கிறது. படித்த பெண் கள் நூலகங்கள் சென்று வாசிக்கிறார்களா இல்லையே, சாயங்கால நேரங்களில் தொலை காட்சி முன் அமர்ந்து விடுகிறார்கள். கேட் டால் ஓடி ஆடி வேலைக்கு பின் ஓய்வாக இருப்பதாக சொல்லுகிறார்கள். அதே ஆண்களை எடுத்துக்கொண்டால் ஓய் வைத் தேடி தொலைக்காட்சி பார்ப்பது மிக வும் குறைவு வெளியே சென்று வாசிக் கிறார்கள். உடலை கட்டுக்கோப்பாக வைத் திருக்க வாக்கிங், ஜாக்கிங்  சென்று விடுகிறார்கள். வீட்டிலிருக்கும் ஆண்களை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய நல்ல விசயங்கள் இருக்கின்றன. வீடுகளில் ஆண்களும் பெண்களும் பொது சமூகம் எப்படி இருக்கின்றது என்பதை பேச வேண்டும் அப்படி பேசினால்   பெண்களின் நிலை வீட்டில் இருப்பவர்களுக்கு புரிய வரும். அப்படிப்பட்ட குடும்பங்கள்  சில வற்றை பார்த்திருக்கிறேன். மிகச் சிறப்பாக நல்ல சமூகத்தின் அடையாளமாக திகழ் கிறார்கள்.  அனைத்து குடும்பங்களிலும் இப்படி நல்ல மாற்றங்கள் வரவேண்டும் அதற்காக மெனக்கெடல் வேண்டும்... பழைமையில் புரையேறிப் போய் இருக்கும் சமூகத்தில் மனிதாபிமா னத்தோடு பெண்களின் நிலையை பார்க்க வேண்டும். இன்னொரு முக்கியமான விச யத்தை பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். பரிசுப் பொருள்களை  மற்றவர் கள் இடத்திலிருந்து வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பரிசுப் பொருள் களை தந்து சிந்தனைகளை மடைமாற்று செய்து விட முடியும் அதன்பின்  நல்ல விச யங்களை கேட்கமுடியாமல் பேசமுடியமல் போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தந்தை பெரியார் சொன்ன - ஏன்!? எதற்கு!? என்ற கேள்விகள் பெண்களிடமிருந்து தான் அதிகம் வெளிப்பட வேண்டும். அப்போது தான் நல்ல சமூகம் உருவாகும்...  கல்வி வேலையைத் தரும், பணத்தை தரும் ஆனால் நல்ல அறிவு? ஆம் பகுத்தறிவு நம்மீது சமூகம் திணித்து வைத்திருக்கின்ற அடிமைச் சங்கிலியை உடைத்து நல்ல சமூகத்தை உருவாக்கும், உருவாக்குவோம்!

No comments:

Post a Comment