சென்னை,செப்.27- ஜெனிவாவில் நடைபெற்று வரும் அய்நா மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய 51ஆவது அமர்வில் இலங்கை தமிழர் பிரச்சினை பரிசீல னையில் உள்ளது. அதற்கு ஆதரவாக இந்தியா தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என பிரத மரிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில், ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு பன்னாட்டு குற்றவியல் மன்றத்தில் விசாரணை நடத்தவும், இலங் கையின் வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் ஈழம் குறித்துப் பொது வாக்கெடுப்பு நடத்தவும், ஈழத் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள பகுதிகளைத் திரும்ப ஈழத்தமிழர்களுக்கே கொடுக்கவும், அய்.நா. மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானங்கள் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து பிரதமருக்கு வைகோ கடிதம் அனுப்பிஉள்ளார். மேலும், அய்நாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment