புனே, செப்.21- சட்டமன்றங்கள் - நாடாளுமன்றங் களில் மகளிர்க்கு 33 சதவிகித இடஒதுக் கீடு வழங்குவதற்கு உகந்ததாக வட மாநிலத்தவரின் மனநிலை இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். மகாராட்டிரா மாநிலம் புனேவில் புனே டாக்டர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், சரத் பவார், அவரது மகளும், மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலே ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது எழுப்பப்பட்ட கேள்வி களுக்கு பதிலளித்து சரத் பவார் கூறியதாவது:
நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளில் பெண் களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது. நான் காங்கிரஸ் மக்களவை உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். ஆனால், நாடாளுமன்றத்தின், குறிப்பாக வட இந்தியாவின் மனநிலை இந்த பிரச்சினையில் உகந்ததாக இல்லை. நான் காங்கிரஸ் மக்களவை உறுப்பினராக இருந்தபோது, நாடாளு மன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பேசியது நினை விருக்கலாம். ஒரு முறை எனது உரையை முடித்து விட்டு திரும்பிப்பார்த் தேன். எனது கட்சியை சேர்ந்த பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களே அப்போது எழுந்து சென்று விட்டதை கண்டேன். பெண்களுக்கு 33 சதவிகித இடஒது க்கீடு கொடுப்பது, எனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு கூட ஜீரணிக்கக் கூடியதாக இல்லை. அனைத்துக் கட்சிகளும் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். நான் மகாராட்டிரா முதலமைச்சராக இருந்தபோது, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் மக்கள் அதை ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு சரத் பவார் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment