புதுடில்லி,செப்.10- திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான சட்டம் இயற்ற ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.கடந்த 2018இல் ஒன்றிய அரசின் நிறுவனமாக இருந்த 'ஏர் - இந்தியா'வில் விமான பணிப்பெண் வேலைக்கு ஷானவி என்ற திருநங்கை விண்ணப்பித்தார். ஆனால், அவரது விண்ணப்பத்துக்கு எந்தப் பதிலும் வரவில்லை. இதை யடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.
நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருநங்கைகளுக்கு வேலைவாப்பு வழங்குவதற்கான சட்டம் இயற்ற ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத் தினர். மேலும், இது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு, திருநங்கை களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வழிகாட்டு நெறி முறைகளை சமர்ப்பிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment