பெங்களுரு,செப்.22 14 மாதங்களாக சிறையில் வாடிய இலங்கை தமிழர்களை நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவால் அகதிகள் முகாமிற்கு கருநாடக அரசு மாற்றியது. கடந்த ஆண்டு வெளிநாடு செல்வதற்காக கருநாடக மாநிலம் மங்களூருவுக்கு படகு மூலம் தப்பி வந்த 38 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிற்கு மாற்றக்கோரி, தேசிய பாதுகாப்பு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின் போது மாநில அரசை கண்டித்த நீதிபதிகள், சிறையில் உள்ள இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிற்கு மாற்ற உத்தர விட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment