சென்னை, செப்.10 - சுகாதார காப்பீட்டாளர்களுக்கு சிறப்பு சேவைத் திட்டத்தின்கீழ் நேரடி காப்பீட்டு தரகு உரிமம் பெற்றுள்ள லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாடு முழுவதும் 5,000 காப்பீட்டு ஆலோச கர்களை பணியமர்த்தவுள்ளது.
இதற்காக லார்ட்ஸ் மார்க் இன்சூரன்ஸ் புரோக்கிங் நிறுவனம், 'பாலிசி கிங்' என்கிற தன்னுடைய காப்பீட்டுத் தளத்தை அறிமுகப்படுத்துகிறது. காப்பீட்டுத் துறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து இந்நிறுவனர் சச்சிதானந்த் உபாத்பாய் கூறியிருப்பதாவது:
இந்தியக் காப்பீட்டுத் துறையின் குறைந்த ஊடுருவல் காரணமாகவும், ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீடு பற்றிய அதிகரித்த விழிப்புணர்வு காரணமாகவும், வளர்ச்சி - சேவை வழங்குதல் சார்ந்த புதிய கண்ட றிதல்களுக்கு பெரும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
வழக்கமான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அணுகு முறையை ஒருங்கிணைத்து, எங்களின் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட காப்பீட்டுத் தளமானது, காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதை வசதியாகவும், தொந்தரவின் றியும் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்களின் முழுமையான மருத்துவக் காப்பீட்டு ஆதரவு சேவையானது. வழக்கமான காப்பீட்டு விநியோக முறையை தலைகீழாக மாற்றி வாடிக்கையாளர் சேவை அளவுகோல்களை மறுவரையறை செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment