திருச்சி, செப். 10- பகுத்தறிவாளர் கழக மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் 4.9.2022 ஞாயிறு காலை 10:30 மணி அளவில் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் கூடியது.
கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா தமிழ்ச்செல்வன் தலைமையேற்றார். திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் செயலாளர் மலர்மன்னன் அவர்கள் வரவேற்றார். வருகை புரிந்த அனைத்து தோழர்களும் தங்களை அறிமுகம் செய்து கொண் டார்கள். தொடர்ந்து தலைமை வகித்த இரா.தமிழ்ச்செல்வன் தன்னுடைய முன்னுரையில் இந்த கூட்டத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
கடந்த பத்து மாத கால பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள் இயக்கத்தின் கட்டமைப்பு , எதிர்கால திட்டங்கள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து வந்திருக்கின்ற பொறுப்பாளர்கள் தங்களு டைய மாவட்டத்தின் நிலை பற்றி உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வேகமாக செயல்பட...
தொடர்ந்து பொதுச் செயலாளர் வி.மோகன் இந்த கூட்டம் கூட்டப்பட்டதன் நோக்கம் மற்றும் ஏன் திருச்சியில் கூட்டப்பட்டு இருக்கிறது என்பதை பற்றியும், பகுத்தறிவாளர் கழகம் தென் மாவட் டங்களில் இன்னும் வேகமாக செயல்பட வேண்டிய தன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர்கள் திருப் பூர் குமாரராஜா, திருச்சி மலர்மன்னன், தஞ்சாவூர் அழகிரி, சங்கர் , பேராசிரியர் மணிமேகலை, கன்னியா குமரி சிவதாணு, பெரம்பலூர் நடராஜன் , நவநீத சோழன் தென்சென்னை மாணிக்கம், மயிலாடுதுறை சாமிதுரை , செங்கல்பட்டு தீனதயாளன், சிவக்குமார், சகாயராஜ், திண்டிவனம் நவா. ஏழுமலை, மன்னார் குடி . கல்யாணசுந்தரம், நீடாமங்கலம் வீரமணி, கடலூர் கந்தசாமி, ஆத்தூர் முருகானந்தம், சிதம்பரம் நெடு மாறன், கதிரவன் ஆகியோர் தங்களுடைய மாவட்டத் தின் சார்பாக கருத்துகளை எடுத்து வைத்தார்கள்.
தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் பொன்னமராவதி சரவணன், தஞ்சை கோபு.பழனிவேல் ஆகியோர் தங்களுடைய கருத்து களை பதிவு செய்தார்கள். பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் மன்னை கோபால், நீடாமங்கலம் வீரமணி , பெரம்பலூர் நவநீத சோழன், தஞ்சாவூர் சங்கர், மண்டல ஆசிரியர் அணி தலைவர்கள் நீடாமங்கலம் சி.ரமேஷ், தருமபுரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
எதிர்கால திட்டங்கள்
தொடர்ந்து பகுத்தறிவு ஆசிரியரணி மாநிலத் தலைவர் வா. தமிழ் பிரபாகரன் தன்னுடைய கருத் துகளை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து பகுத் தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி தன்னுடைய கலைத்துறை சார்பாக செயல்பாடுகளை யும் எதிர்கால திட்டங்களையும், இயக்கத்தை கட் டியமைப்பது பற்றியும் உரையாற்றினார்.
அடுத்ததாக பேசிய ஊடகத்துறை தலைவர் மா.அழகிரிசாமி ஊடகத்துறை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் ஊடகத்துறையில் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாகவும் தொடர்ந்து பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி பற்றியும் விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தினுடைய தலைவர் ஆரோக்கியராஜ் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்றும், பகுத்தறிவாளர் கழகத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றியும் பேசினார்.கூட்டத்தின் தீர்மானங்களை பொதுச் செயலாளர் வி.மோகன் படித்தார். அனைவரது பலத்த கையொலியோடு தீர்மானம் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து நிறைவுறையாற்றிய தலைவர் இரா தமிழ்ச்செல்வன் அனைவருடைய கேள்விகள், சந் தேகங்களுக்கும் பதில் அளித்து உரையாற்றி, அடுத்த கலந்துரையாடல் கூட்டம் ஆசிரியர் அவர்களுடைய தலைமையில் என்பதையும் அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இவ்வாண்டு தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதா கிருஷ்ணன் விருது பெரும் பெரம்பலூர் நடராஜனை வாழ்த்தி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அவருக்கு பொன்னாடை அணி விக்கப்பட்டது .
மாநில கலந்துரையாடல் கூட்டத்திற்கு எல்லா வகையிலும் உதவி செய்த திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜுவுக்கு ஊடகத்துறை தலைவர் மா.அழகிரிசாமி சிறப்பு செய்தார்கள். பேராசிரியர் மணிமேகலை விழாவில் சிறப்பிக்கப் பட்டார்.
பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றி கூறிட கூட்டம் முடிவுற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் திருச்சி பெ.கவுதமன், எம்.குத்புதீன், பா.லெ.மதிவானன், இரா.மணியன், ஆறுமுகம், தமிழ்ச்சுடர், சேதுராமன், ஜோ.பென்னி, இலால்குடி மூ.முத்துசாமி, இலால்குடி மா.சுப்பிரமணியன், தஞ்சாவூர் லெட்சுமணன், தஞ்சாவூர் மனோகரன், தஞ்சாவூர் பெரியார் கண்ணன், திண்டிவனம் புலவர் இரா.சாமிநாதன், மயிலாடுதுறை ஞான.வள்ளுவன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.
தீர்மானம் 1:
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, புரட்சி கவிஞர் பாரதிதாசன், முத்தமிழ் அறிஞர் கலைஞர் , தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர்கள் கழகத்தின் அனைத்து பிரிவுகளின் சார்பிலும் மாவட்ட தோறும் கருத்தரங்கம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம். 2:
இயக்க ஏடான ‘விடுதலை'யின் ஆசிரியராக உல கில் எந்த ஏட்டிற்கும் இல்லாத சிறப்பாக 60 ஆண்டை நிறைவு செய்யும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளுக்கு இக்கூட்டம் பாராட்டினையும், வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, 60 ஆயிரம் சந்தா வழங்கும் விழா செப்டம்பர் 6ஆம் நாளில் தோழர்கள் அதிகம் கலந்து கொண்டு சிறப்பிப்பது என தீர் மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3 :
60 ஆயிரம் விடுதலை சந்தா வழங்கும் பணியில் தோழர்கள் சிறப்புடன் பணியாற்றி அதிக சந்தாக்கள் திரட்டி கொடுத்தமைக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் தொடர்ந்து, இயக்க ஏடான மாடர்ன் ரேஷனலிஸ்ட் மாத இதழுக்கும் அதிக சந்தாக்களை திரட்டி வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4:
பகுத்தறிவாளர்கள் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்படும் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கான பேச்சுப் போட்டிகளில் அதிகமான மாணவர்களை பங்கேற்க வைப்பதற்கான முயற்சி களை மேற்கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக் கிறது.
தீர்மானம் 5:
அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துறைவாரியாக குறைதீர்க்கும் குழுவினை அமைத்திடுமாறு தமிழ்நாடு அரசினை கூட்டம் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது
தீர்மானம் 6 :
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 என்று இருப்பதை மாற்றி 30 ஆண்டு பணி அல்லது 58 வயது நிறைவு இதில் எது முன்னதாக வருகிறதோ அதன்படி பணி ஓய்வு வழங்கிடுமாறு தமிழ்நாடு அரசினை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது.
தீர்மானம் 7:
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிபிஎஸ் முறையினை ஒழித்து பழைய ஓய்வூதியம் முறையினை நடைமுறைப்படுத்திட வேண்டுமாய் தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 8:
பெரியார் ஆயிரம் வினா- விடை போட்டியினை நடத்தாத மாவட்டங்கள் விரைந்து நடத்திடவும் அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் பரிசு அளிக்கும் விழாக்களை நடத்துமாறும், இந்நிகழ்வை பயன்படுத்தி மாண வரிடம் பெரியாரின் சிந்தனைகளை கொண்டு செல் லுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 9:
பள்ளி, கல்லூரி அருகில் போதைப் பொருள் விற் பனையில் ஈடுபடுவதையும், அதை பயன்படுத்துபவர் களையும் கடுமையான சட்டங்களின் மூலம் தண்டிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசினை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது .
தீர்மானம் 10 :
ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை தடுக்கும் நீட் நுழைவுத் தேர்வினை விலக்கிட வேண்டி தமிழ்நாடு அரசு நியமித்த ஏ.கே. ராஜன் குழு வின் அறிக்கையினையும் மாநில அமைச்சரவையின் தீர்மானத்தையும் உடனடியாக ஏற்று நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திட வேண்டுமாய் ஒன்றிய அரசினை இக்கூட்டம் வலி யுறுத்தி கேட்டுக் கொள்கிறது .
தீர்மானம் 11:
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வியை பறித்து அவர்களை குலத்தொழிலுக்கு அழைத்துச் செல்லும் நவீன குலக்கல்வி திட்டமான புதிய கல்விக் கொள்கையினை எந்த வடிவத்தில் நுழைந்து விடாமல் தடுத்திட வேண்டும் என தமிழ் நாடு அரசினை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 12 :
கல்லூரிகள் அனைத்தையும் இணைத்து கல்லூரி களின் முடிவுகளையும் பிரச்சனைகளையும் தனியாக ஒரு அமைப்பு நிர்வகிக்கும் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவித்திருக்கும் அறிவிப்பு கல்லூரி களின் உரிமையையும் மாநில அரசின் உரிமைகளையும் அடியோடு அபகரிக்கும் முடிவாகும். எனவே அதனை தடுத்து புதிய கல்விக் கொள்கையின் ஒரு கூரான அம்முடிவை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வரை கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 13:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு பணிகளுக்கும் தலைமை ஆசிரியர் பணிகளுக்கும் தன் சுயஜாதியைச் சேர்ந்தகளே வரவேண்டும் என்ற எண் ணத்தில் பணிமூப்பில் பதவி உயர்வு பெற வேண்டிய வர்களை கட்டாய பணி ஓய்வு பெற வைக்கும் முடி வுகளை கண்டிப்பதுடன், இதனை தமிழ்நாடு அரசு கண்காணித்து பதவி உயர்வுக்கு பணி மூப்பில் உள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவருக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்று கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 14 :
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு 7.5 விழுக் காடு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவினை பாராட்டு வதுடன் இட ஒதுக்கீட்டினை உயர்த்தி 15 விழுக் காடாக மாற்றுவதுடன் அதில் 5% உள் ஒதுக்கீடாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 15 :
பள்ளி, கல்லூரி பாட புத்தகங்களை மறு ஆய்வு உட்படுத்தி அதில் புகுத்தப்பட்டுள்ள பகுத்தறிவுக்கு முரணான கருத்துகளையும், திராவிட இனத்திற்கு எதிரான கருத்துகளையும் நீக்குவதுடன் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், வாழ்க்கை வரலாறுகளையும் ,திராவிட இயக்க வரலாற்றுச் செய்திகளையும் அனைத்து நிலைகளிலும் பாடமாக வைத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை இக் கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 16:
அரசு அலுவலகங்களில், பள்ளிக்கூடங்களில் ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை கொண்டாடுவதை தடை செய்திட வேண்டும் எனவும் , கருநாடக மாநி லத்தினை போன்று மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத் தினை தமிழ்நாட்டிலும் நிறைவேற்றிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இக் கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment