திண்டிவனம், செப். 12- திண்டிவனம் கால்பந்து சங்கம் மற்றும் திண்டி வனம் திராவிடர் கழகம் இணைந்து நடத்திய தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கால்பந்து கோப்பை 11.9.2021
ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட தலைவர் இர.அன்பழகன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன் அனை வரையும் வரவேற்று பேசினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் வெற்றி பெற்ற வீரர்க ளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். விளை யாட்டின் முக்கியத்துவத் தையும் கல்வியின் அவசி யத்தையும் இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண் டும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா ஆகியோர் கட்டிக்காத்த சமூக நீதியை பாதுகாக்க வேண் டும் என பேசினார். சிறப்பு அழைப்பாளராக திமுக வடக்கு மாணவ ரணி அமைப்பாளரும் நகர்மன்ற உறுப்பினரு மான எம்.டி.பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மண்டல செயலாளர் தா.இளம் பரிதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பிபிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் பா. வில்ல வன் கோதை, நகர தலை வர் உ.பச்சையப் பன்,நகர செயலாளர் சு.பன்னீர் செல்வம்,மயிலம் ஒன்றிய செயலாளர் தழுதாளி ச.அன் புக்கர சன், ஓவியர் செந்தில் மு. இரமேஷ், கே.பாபு பங்கேற்றனர்.
No comments:
Post a Comment