பெரியாறு அணை: தமிழ்நாட்டுக்கு கூடுதல் தண்ணீர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

பெரியாறு அணை: தமிழ்நாட்டுக்கு கூடுதல் தண்ணீர்

கம்பம்,செப்.21- தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் திட்டம் மற்றும் வடிவமைப்பு கண்காணிப்புப் பொறி யாளர் ஜமுனா தேவி மற்றும் பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு வந்தனர். பிரதான அணை, பேபி அணை, சுரங்கப் பகுதியில் நீர்க் கசிவு அளவு மற்றும் மதகுப் பகுதிகளைப் பார்வையிட்டனர். பின்னர் போர்பை டேம், லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

இது குறித்து பெரியாறு அணை பொறியாளர் ஒருவர் கூறியது: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டு பகுதிக்கு சுரங்கக் குழாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடுவதைத் தவிர மாற்றுப் பாதையான இரைச்சல் பாலத்தில் தண்ணீர் வெளியேற்றினால் மலைப்பாதையில் சரிவுகள் ஏற்படுமா, மின்சார உற்பத்தி நிலையத்திற்கு பாதிப்பு ஏற்படுமா, பாதிப்பு ஏற்படாமல் தண்ணீர் எடுப்பது எப்படி என்று ஆய்வு செய்யப்பட்டது என தெரிவித்தார்.

அணை நிலவரம்: முல்லைப்பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீர்மட்டம், 135.80 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 6,067.60 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 527 கன அடியாகவும், தமிழ்நாட்டு பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 1867 கன அடி யாகவும் இருந்தது. அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதி களான பெரியாறு அணை மற்றும் தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.


No comments:

Post a Comment