செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

செய்தியும், சிந்தனையும்....!

ஒட்டகத்தைப் பழிக்கவேண்டாம் கொக்கு!

* நடைப்பயணத்தில் பிரிவினைவாதிகளை சந்திக்கிறார் ராகுல்.

- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை

>> பி.ஜே.பி. என்றாலே பிறப்பின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் கட்சியாயிற்றே!

பேசுவதற்கு சரக்கு இல்லை!

* ராகுல் காந்தி வெளிநாட்டு நிறுவனத்தின் ‘டிஷர்ட்' அணிந்துள்ளார்.

- உள்துறை அமைச்சர் அமித்ஷா

>> பிரதமர் மோடி 10 லட்சம் ரூபாயில் உடை அணிந்தாரே!

அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லையே!

* அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கவேண்டும் - ஆளுநரிடம் பி.ஜே.பி. மனு.

>> ஆளுநர் என்ன தமிழ்நாட்டின் முதலமைச்சரா?

அய்யோ பாவம் கடவுள்!

* லேசாக சாய்ந்துள்ள 89 அடி விநாயகர் சிலை - ஆந்திர மாநில பக்தர்கள் அதிர்ச்சி.

>> கடவுள்மீது பக்தர்களுக்குப் பரிதாப உணர்ச்சியா - பலே, பலே!

கோவிந்தா! கோவிந்தா!

* திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

>> அரசியல் எங்கே போய் தவமிருக்கிறது பார்த்தீர்களா?

No comments:

Post a Comment