சென்னை, செப்.21 குன்றத்தூரில் நடந்து வரும் தொல்லியல்துறை அகழாய்வில் தங்கம் கிடைத்தது. காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வுப் பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக நடந்துவரும் இந்த அகழாய்வில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அகழாய்வு பணியானது தொல்லியல் மேட்டின் தென்கிழக்கு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 1லு கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் 2 கிடைத்துள்ளது. மேலும் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சூடுமண்ணாலான பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது. அகழாய்வு குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறும்போது, நத்தமேடு தென்கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணியில் கிடைத்த பொருட்கள் 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருள்களாக இருக்கலாம் என அவர் கூறினார்.
Wednesday, September 21, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment