மலேசிய கெடா மாநிலம் கம்போங் ராஜா கிளை சார்பில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா மற்றும் பெரியார் அரங்கம் திறப்பு விழா கிளை தலைவர் வடிவேல் கதிரவன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் ரங்கசாமி சண்முகம் முன்னிலையில் நடைபெற்றது. மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவர் டத்தோ அண்ணாமலை பேசியதை அடுத்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பெரியார் அரங்கத்தை திறந்து வைத்து தந்தை பெரியார் பிறந்த நாள் கேக் வெட்டி சிறப்புரை ஆற்றினார். தேசிய உதவி தலைவர் மனோகரன், கெடா மாநில தலைவர் பாலன் குமரன், செயலாளர் லலிதகுமாரி, இப்போ விந்தைகுமரன், பினாங்கு நாராயணசாமி பெருமாள், கிளைச் செயலாளர் முருகேசன் சுப்பையா, டாக்டர் முரளி, கூலிங் மாரிமுத்து, ராமன், தயாளன், தனக்கோடி மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். தந்தை பெரியாரின் பெண்ணுரிமை, பகுத்தறிவு, சடங்கு - சம்பிரதாய எதிர்ப்பு குறித்த உரையாக பொதுச் செயலாளரின் உரை அமைந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கதிரவன் சிறப்பாக நிகழ்ச்சியை வடிவமைத்து இருந்தார். முருகேசன் நன்றி கூறினார்.
Friday, September 23, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment