சூரிச்,செப்.22- சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனமான கிரெடிட் சுவிஸ், வருடாந்திர உலக சொத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8 கோடி) மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.25 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2026-இல் 8.75 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவில் ரூ.8 கோடிக்கு மேல்சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 நிலவரப்படி இந்தியாவில் 7.96 லட்சம் பேர் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். 2026-இல் இந்த எண்ணிக்கை 105 சதவீதம் உயர்ந்து 16.23 லட்சமாக இருக்கும் தெரிவித்துள்ளது. அதேபோல், சீனாவில் 2021 நிலவரப்படி 62 லட்சம் பேர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2026-ல் 97 சதவீதம் உயர்ந்து 1.2 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பெரும் பணக்காரர்களின் எண்ணிக் கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2.4 கோடி பெரும் பணக்காரர்கள் உள்ளனர். 2026-ல் அந்த எண்னிக்கை 2.7 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சீனா இரண்டாம் இடத்திலும், ஜப்பான் மூன்றாம் இடத்திலும், பிரிட்டன் நான்காம் இடத் திலும் உள்ளன. தற்போது உலக பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையில் அமெ ரிக்காவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் பங்கு 1 சதவீதமாக உள்ளது.
No comments:
Post a Comment