வள்ளலாருக்கு விழா : தமிழ்நாடு அரசு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

வள்ளலாருக்கு விழா : தமிழ்நாடு அரசு முடிவு

சென்னை, செப்.2- தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன் வெளியிட்டுள்ள அர சாணையில் கூறப்பட்டு இருப்ப தாவது:

இந்துசமய அறநிலையத்துறை யின் 2022_-2023ஆம் ஆண்டுக் கான மானியக் கோரிக்கையின் போது அந்தத் துறையின் அமைச் சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட் டார்.

அதில், வள்ளலார் தர்மசாலை தொடங்கிய 156-ஆவது ஆண்டின் தொடக்கம் (25.5.2022) இந்த உல கத்திற்கு அவர் வந்த 200-ஆவது ஆண்டு தொடக்கம் (5.10.2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-ஆவது ஆண்டு (5.2.2023) ஆகிய 3 நிகழ்வுகளையும் இணைத்து, அவரது 200-ஆவது அவதார ஆண்டான இந்த ஆண்டு அக் டோபர் முதல் அடுத்த ஆண்டு அக்டோபர் வரை 52 வாரங் களுக்கு முக்கிய நகரங்களில் முப் பெரும் விழா எடுக்கப்படும். இதற்காக சிறப்புக் குழு அமைக் கப்படும் என்று கூறியிருந்தார்.

அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, 52 வாரங்களுக்கு முக்கிய நக ரங்களில் முப்பெரும் விழாவை நடத்துவதற்காக 14 பேரைக் கொண்ட சிறப்புக் குழு அமைத்து ஆணையிடப்படுகிறது.

இந்தக் குழுவின் தலைவராக டாக்டர் பி.கே.கிருஷ்ண ராஜ் வானவராயர் இருப்பார். சாரதா நம்பி ஆரூரன், அருள்நந்தி சிவம், உமாபதி (வள்ளலார் பேரன்), தேசமங்கையர்க்கரசி, உலகநாயகி உள்பட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

துறையின் இணை ஆணையர் (கடலூர்) பதவி வழி உறுப்பினர் செயலாளராகவும், உதவி ஆணை யர் (கடலூர்) கூட்ட ஒருங்கி ணைப்பாளராகவும் செயல்படு வார்கள். -இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.


No comments:

Post a Comment