பாட்னா, செப். 3- பாஜக தலைவர்கள் ஒருவர் வீட்டிலும்கூட மத்திய அமைப்புகள் சோதனைகளை நடத்தாதது ஏன்? என்று தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளத்தில் வியாழனன்று (2.9.2022) சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஊழல்வாதிகளை சில கட்சிகள் பாதுகாக்கின்றன என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில்,ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதலமைச்சரு மான தேஜஸ்வி, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
“பாஜக-விடம் கிட்டத்தட்ட ஆயிரத் திற்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் யாரு டைய வீடுகளிலாவது சோதனை நடத்தப் பட்டதா? அவர்கள் அனைவரும் ‘புனித'மான வர்களா? அல்லது பாஜகவில் சேருபவர்கள் ‘புனித'மான வர்களாக மாறுகிறார்களா? இங்கு ஏன் ரெய்டுகளை நடத்துவ தில்லை? அவர்களை யார் காப்பாற்றுகிறார்கள்?” என்று தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையே பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் குறிப்பிட்டுள்ளார்.
“நான் கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன். வாஜ்பாய் நாட்டின் பிரதமராக இருந்தபோது, அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, இங்கும் பீகார் மக்கள் பணியாற்ற வாய்ப்பு அளித்துள்ளனர். ஊழல்வாதிகளை யாரும் பாதுகாக்கவில்லை, மற்ற (பாஜக ஆளும்) மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் (பாஜகவினர்) சிந்திக்கவேண்டும்” என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment