சென்னை, செப்.9- மாற்றுத் திறனாளிகள் உதவியாளர்களை நியமித்துக் கொள்ள மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், கூடுதலாக 757 பயனாளிகளைச் சேர்க்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலாளர் இரா.ஆனந்தகுமார் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது,
அதிக உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக, மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப் படுகிறது. இந்தத் திட்டத் தின் கீழ், 2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ.96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
2020-2021-ஆம் நிதியாண்டில் காத்திருப்போர் பட்டி யலில் உள்ள அதிக உதவித் தேவைப்படும் கூடுதலான மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 757 ஆகக் கணக் கிடப்பட்டுள்ளது. அவர்களும் உதவியாளர்களை நியமித்துக் கொள்ள வசதியாக மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப் படுகிறது. இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment