சென்னை,செப்.30- தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கு.ரத்னகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உட்பட பிற உயர்கல்வி நிறுவனங்களைபோல, திறந்தநிலை பல்கலை.யில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம்நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலை. வளாகத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. ஹாஷ்காரியா பவுண்டேஷனுடன் இணைந்து நடத் தப்படும் இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை வேலைவாய்ப் புக்கு தேர்வு செய்ய உள்ளன. இதில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணி யன் மூலம்பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்.
முகாமில் பங்குபெற விருப்பமுள்ள வர்கள் இதற்கான விண்ணப்பங்களை ஷ்ஷ்ஷ்.tஸீஷீu.ணீநீ.வீஸீ என்றவலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். கூடுதல்விவரங்களுக்கு, பல்கலை. மாணவர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு இயக்குநர் அய்.அம்பேத் உட்பட வழிகாட்டுக் குழுவினரை 9791234586, 8667511342 என்றசெல்போன் எண் களில் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment