செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

செய்தியும், சிந்தனையும்....!

தானாக சிக்குகிறார்கள்

* அமைச்சர் ஆ.இராசா பேச்சுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம்.            - பி.ஜே.பி. அறிவிப்பு

>> சிறைக்குப் போக வேண்டியவர்கள்தானே!

சாமிகளின் சக்தி?

* காலசம்ஹார மூர்த்தி சாமி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு. 

>> கடவுளைக் காப்பாற்றுவதே பெரிய வேலையாப் போச்சு!

ஏமாந்துவிட வேண்டாம்!

* டில்லியில் மசூதிக்குச் சென்று முஸ்லிம் தலைவர் களைச் சந்தித்து, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆலோசனை. 

>> இப்படிதான் 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு முஸ்லிம்கள் மாநாட்டில் அத்வானி கலந்து கொண்டார்.

ஜாதி வால்?

* தமிழகத்தில் ஜாதி பாகுபாடு அதிகம்.

- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை 

>> அண்ணாமலை வட மாநிலத்தில் இருந்தால் தன் பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை ஒட்டி வைத்திருப்பார்.


No comments:

Post a Comment