தென்கொரியா செல்கிறது தமிழ்நாடு குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

தென்கொரியா செல்கிறது தமிழ்நாடு குழு

சென்னை ,செப்.12- வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, தொழில் துறை அமைச்சர் தலைமையிலான குழு, அய்ந்து நாள் பயணமாக தென் கொரியா செல்கிறது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அடங்கிய உயர்மட்டக் குழு, அய்ந்து நாட்கள் பயணமாக தென்கொரியா செல்ல உள்ளது.

அங்குள்ள தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது.அதில், தமிழ்நாட்டில் உள்ள வளங்கள், ஏற்கெனவே முதலீடு செய்த மற்றும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் உள்ளிட்ட தகவல்கள், காட்சிப்பதிவு வாயிலாக ஒளிபரப்பு செய்து விளக்கம் அளிக்க உள்ளனர்.இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment