சோவியத் - கோர்பச்சேவ் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

சோவியத் - கோர்பச்சேவ் மறைவு

மாஸ்கோ, செப். 1- சோவியன் யூனியனின் மேனாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (வயது 91). சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான மிக்கைல் கோர்பசேவ் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991ஆம் ஆண்டு சோவி யத் யூனியன் கலைக்கப் படும் வரை தலைவராக இருந்தார். 

அப்போது மிகப் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். இவ ரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. 

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாயின. சோவியத் யூனியன் பொருளாதாரம் மறை முகமான பணவீக்கம் மற் றும் விநியோகப் பற்றாக் குறை ஆகிய இரண்டா லும் பாதி க்கப்பட்டிருந்த தால், ‘பெரெஸ்ட்ரோயிகா' அல்லது மறுசீர மைப்பு என்ற பொரு ளாதார சீர்திருத்தத் திட் டத்தையும் கோர்பச்சேவ் தொடங்கினார். அவரது காலத்தில் பத்திரிகை மற்றும் கலை சமூகத்திற்கு கலாச்சார சுதந்திரம் வழங் கப்பட்டது. அரசாங்க எந்திரத்தின் மீதான கட்சிக் கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் தீவிர சீர்திருத்தங்களை அவர் செய்தார். அவரது ஆட்சியின் போது ஆயி ரக்கணக்கான அரசியல் கைதிகள் மற்றும் அவர் களது எதிர்ப்பாளர்கள் விடுவிக்கப்பட்டனர். 1990ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், வயது முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக மிக்கைல் கோர்பசேவ் மரணம் அடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment