தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கப் பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன்
சென்னை, செப். 23- திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா மீதான மதவெறி சக்திகளின் அச்சுறுத்தலை கண்டித்து, ஜனநாயக விரோத சக்திகளை கண்டித்து 24.9.2022 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநில பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு,
திமுக துணைப் பொதுச் செயலாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.இராசா அவர்களின் சமீபத்திய உரையை முன்வைத்து பாரதீய ஜனதா கட்சியும், சில மத அடிப்படைவாத சக்திகளும் தமிழ்நாட்டில் வன் முறையை தூண்ட முயற்சிக்கின்றனர். மனுஸ் மிருதியில் ஜாதிய முறையை நியாயப்படுத்தியும் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தியும் உள்ள வாசகங்களைத்தான் ஆ.இராசா எடுத்துக் கூறினார்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியும் இந்து மத அடிப் படைவாத அமைப்புகளும்ஆ.இராசா அவர்கள் இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக தவறாக திரித்துக்கூறி தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார்கள். கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்க முயற்சிக் கிறார்கள். இத்தகைய ஜனநாயக விரோத சக்திகளை கண்டித்து 24.09.2022 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக் கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதில் மாநில-மாவட்ட முன்னணி தலைவர்கள், மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment