தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியின் மூத்த திராவிடர் கழகத் தோழர், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் க.திராவிடமுத்து அவர்கள் (வயது 77) நேற்று (19.9.2022) மாலை 6 மணியள வில் முடிவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
மறைந்த தோழர் மானமிகு திராவிடமுத்து அவர்களை நான் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அறிந்தவன். அன்புடன் பழகிய கொள்கை வீரர்.
திராவிடமுத்து அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள கோயிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்று, உயர் ஜாதியினரின் கட்டுப்பாட்டினை உடைத்துக் காட்டிய போராளி என்ற பெருமைக் குரியவர்.
அவருடைய முதுமையினால் அவரால் முன்பு போல கழகப் பணியாற்ற இயலாத சூழ்நிலையில் அவர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆகியோரின்பால் காட்டிய கொள்கை உறவை நம்மிடமும் ஒருபடிமேலே சென்று காட்டத் தவறாத பண்பாளர்.
அவரது இழப்பு அக்குடும்பத்தினருக்கு மட்டு மல்ல; இயக்கத்திற்கு ஓர் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத் தினர், அன்பு செல்வங்கள் - குறிப்பாக முனைவர் வளர்மதி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நமது
ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.9.2022
No comments:
Post a Comment