70 ஆண்டு காலம் எந்த ஒரு சிறு பிரச்சினையும் இன்றி, அமைதியாகவும், ஆற்றலுடன் ஆட்சி புரிந்த மாட்சிமைக் குரிய இங்கிலாந்து இராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்கள் தனது 97ஆவது வயதில் முடிவெய்தி விட்டார்.
"மன்னர் மறைந்தார்; மன்னர் வாழ்க"
"The King is dead; Long live the King"
என்ற மரபுச் சொல் உண்டு.
அதன் பொருள், அங்கு மன்னர் பொறுப்பு என்பது அறுபடாத தொடர்ச்சி - காரணம் அது தனி நபர் அல்ல; ஓர் அமைப்பு(not an individual - but an Institution) என்பதாகும்.
அதனை செம்மையுடனும், செறிவுடனும் அவர் நடத்திக் காட்டினார்.
இந்திய உச்சநீதிமன்றம், அண்மையில் ஒரு வழக்கொன்றில், விடுதலை செய்திருக்க வேண்டிய நபரை விடுவிக்காமல் நீண்ட காலம் இழுத்தபோது கடமையாற்றத் தவறிய செயலைச் சுட்டிக் காட்டியபோது, ஆளுநர் அதிகாரம் என்பதும், குடியரசுத் தலைவர் அதிகாரம் என்பதும், இங்கி லாந்து நாட்டு இராணிக்குரியது போன்ற அவர்களுக்கெனத் தனி முடிவு எடுக்கும் அதிகாரம் கிடையாது; நாடாளுமன்ற, சட்டமன்ற முடிவே அவர்களது முடிவாகும் என்பதே அரசமைப்புச் சட்டப்படி உள்ள நிலைமை என்று சுட்டிக் காட்டியிருந்தது.
70 ஆண்டில் 16 பிரதமர்கள் தேர்வு உள்பட பல பிரச்சினைகளில் விவகாரம் இல்லாமல் ஜன நாயகத்திற்கு சேதாரம் இன்றி நடந்து கொண்ட இராணியார் எடுத்துக்காட்டானவர். எனவே அவருக்கு ஆழ்ந்த இரங்கல்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.9.2022
No comments:
Post a Comment