ராகுல் நடை பயணம் : சாலைகளில் மக்கள் குவியல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

ராகுல் நடை பயணம் : சாலைகளில் மக்கள் குவியல்!

 புதுடில்லி, செப்.10   காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங் கினார். தமிழ் நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இதை யடுத்து தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல் காந்தி கன்னியா குமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  3-ஆவது நாள் நடை பயணத்தை ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இருந்து காலை 7 மணிக்கு தொடங்கினார். வில்லுக் குறியில் மலர் பாதை அமைத்து ராகுலுக்கு வரவேற்பு அளிக்கபட்டது. நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டார். 3-ஆவது நாள் நடை பயணத்தில் சாலை யோர கடையில் தேநீர் அருந்தினார். 

மேலும் திறந்தவெளியில் பாரம்பரிய கிராமத்து உணவு சமைப்பது குறித்த காட்சிப் பதிவுகளால் பிரபலமான   வில்லேஜ் குக்கிங் சேனலின் உறுப் பினர்களை ராகுல் காந்தி சந்தித்தார். 3ஆ-வது நாள் நடை பயணத்தை முளகு மூட்டில் நிறைவு செய்தார். இந்நிலையில் கன்னியாகுமரி முளகுமூடு பகுதியில் இருந்து 4-ஆவது நாள் நடைபயணத்தை    முடித்துக்கொண்டு கேரளா சென்றார் ராகுல் காந்தி.  

 3ஆ-வது நாள் நடை பயணம் தொடக்க நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், திக்விஜய்சிங், ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய செய லாளர் சிறிவல்லபிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பி னர்கள் உள்பட அகில இந்திய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் திரளானோர் கலந்து கொண் டனர்.  சிலர் ராகுல்காந்தி உருவம் வரையப்பட்ட டி-சர்ட் அணிந்தபடி நடந்து சென்றதையும் காணமுடிந்தது. சாலையின் இருபுறமும் திரண்டு நின்று ராகுல்காந்திக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பார்வதிபுரம், சுங்கான்கடை வழியாக சுமார் 12 கி.மீ. தூரத்தை ராகுல்காந்தி காலை 9.30 மணிக்கு கடந்தார். மாலை 5.15 மணிக்கு புலியூர்குறிச்சியில் இருந்து மீண்டும் நடை பயணத்தை தொடங்கிய அவர் அழகிய மண்டபம் சந்திப்பில் 6.20 மணிக்கு முடித்தார். குறிப்பிட்ட நேரத்தைவிட   வேகமாக நடந்து வந்து ராகுல்காந்தி தனது நடை பயணத்தை நிறைவு செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், "நான் இந்த நடை பயணம் மேற்கொள்ள காரணம், நாடு எந்த விதத்திலும் பிளவுபட்டு விடக்கூடாது என்பது தான். ஜாதி, மதம் மற்றும் மொழி ஆகிய எந்த விதத்திலும் நாடு பிளவுபடாமல், இந்திய நாடாக மட்டும் இருக்க வேண்டும்" என்றார். 

முன்னதாக ராகுல்காந்தியின் நடை பயணத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கி ணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண் டியன் பங்கேற்றார். அவர் 2 கி.மீ. தூரம் ராகுல்காந்தியுடன் இணைந்து நடந்தார். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும், ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்தும் ராகுல்காந்தியிடம் எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 ஊராட்சி தலைவர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அந்த சமயத்தில், ஊராட்சி தலைவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அவர்கள் தங்களுடைய கருத்தை ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, "உங்களுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். கேள்வி கேட்கும் திறமை குறையும் பட்சத்தில் தலைவராக முடியாது" என்றார். 


No comments:

Post a Comment