சென்னை மாநகர அரசு போக்குவரத்து பேருந்துகளில் நிறுத்தம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

சென்னை மாநகர அரசு போக்குவரத்து பேருந்துகளில் நிறுத்தம் அறிவிப்பு

 சென்னை,செப்.3- சென்னை மாநகரப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தும் பணி ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த பேருந்துநிறுத்தம் என்ன என்பது குறித்து பேருந்துகளில் அறிவிக்கும் வசதி விரைவில் அறிமுகமாகவிருக்கிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் சுமார் 6,000 பேருந்துகளில் ஜியோ-கோடிங் செய்து, பேருந்து நிறுத்தங்களைக் கண்டறியும் வசதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறைவு பெற்றுவிட்டது. தற்போது 500 பேருந்துகளில் அந்த அமைப்புகளை நிறுவும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக, ஒவ்வொரு பேருந்திலும் ஆறு ஒலி பெருக்கிகள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. முதற்கட்ட மாக ஆயிரம் பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களை அறிவிப்பதற்கான அமைப்புகளை நிறுவும் பணி நடைபெறும். பிறகு படிப்படியாக அனைத்துப் பேருந்துகளுக்கும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

முதற்கட்டமாக, அடுத்த பேருந்துநிறுத்தம் குறித்த அறிவிப்புகள் தமிழில் மட்டுமே அறிவிக்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு, பிறகு மேம்படுத்தப்படும் போது ஆங்கி லத்திலும் அறிவிக்கும் வகையில் மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த அறிவிப்பானது, ஒரு பேருந்து நிறுத்தம் வருவதற்கு 200 முதல் 250 மீட்டர் தொலைவு இருக்கும் போது பேருந்தில் அறிவிக்கப்படும். விரைவில் அனைத்து விதமான பேருந்து களிலும் இந்த வசதி வந்துவிடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த வசதி முதற்கட்டமாக 37ஜி என்ற பேருந்தில் சோதனைமுறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென் னையில் மொத்தமாக 602 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் 6,026 நிறுத்தங்கள் (பணிமனை மற்றும் பேருந்துநிலையங்கள் உள்பட) உள்ளன. இரண்டு பேருந்து நிறுத்தங்களுக்கு இடையே சராசரியாக 500 முதல் 600 மீட்டர் இடைவெளி இருக்கும். தற்போது 200 முதல் 250 மீட்டருக்கு முன்பே பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

மகப்பேறின்போதோ, பின்னரோ குழந்தை உயிரிழந்தாலும் 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு

புதுடில்லி,செப்.4- மகப்பேறு காலத்துக்கு முன்பே குழந்தை இறந்துபிறந்தாலோ அல்லது பிரசவத்தின்போது குழந்தை இறந்துவிட்டாலோ, பிறந்த சில நாள்களில் குழந்தை இறந்துவிட்டாலோ அந்த பெண் ஊழியர்களுக்கும் 60 நாள்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

குழந்தை பிறக்கும் போதே இறந்து பிறந்தாலோ அல்லது 28 வாரங்களுக்குப் பிறகு கருவுக்கு ஏதேனும் நேர்ந்தாலோ இந்த 60 நாள்கள் மகப்பேறு விடுப்பினை பெண் தொழிலாளி அல்லது ஊழியர் எடுத்துக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment