ஆவடி, செப். 20- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ரா.முரு கேசன்- பத்மினி ஆகியோ ரின் "பெரியார் இல்லம்" திறப்பு விழா-எண்: 26/12, 3ஆவது தெரு, பிருந்தா வன் நகர், சிஆர்பிஎப் அருகில், ஆவடி, சென்னை 600 065.என்ற முகவரியில் 15-.9.-2022 வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணி அள வில் அவர் மகள் அட்சயா திறந்து வைத்தார்.
பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச் செல்வன், பொதுச் செய லாளர் ஆ.வெங்கடேசன் ,ஆவடி மாவட்ட ப.க. தலை வர் ஜானகிராமன், மாவட்ட செயலா ளர் க.இளவரசன், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் ஏழுமலை ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்வில் மாவட்ட இளை ஞரணி தலைவர் கார்வேந்தன், மாவட்ட துணை தலைவர் வேல் முருகன், துணை செயலா ளர் பூவை.க.தமிழ்ச்செல் வன், தாம்பரம் நகர கழக செயலாளர் சு.மோகன் ராஜ், "அறிவு வழி காணொலி" ஒருங்கிணைப்பாளர் அரும்பாக்கம் சா.தாமோ தரன், ஆவடி நகர கழக தலைவர் முருகன், செய லாளர் தமிழ் மணி, வை. கலையரசன், வஜ்ரவேலு, காவியா தமிழ்ச்செல்வன் மற்றும் கழக குடும்பத்தினர் திரளாக வந்து வாழ்த்தினர்.இறுதியில் பத்மினி நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment