திருப்பத்தூர், செப். 11- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 10.9.2022 சனிக்கிழமை அன்று கலந்துரையாடல் கூட் டம் நடைபெற்றது
இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் பெ. கலைவாணன் முன்னிலை வகித்தார்.
இதில் பெரியார் பிறந்த நாள்வை விழா செப்டம்பர் 17இல் சிறப்பாக கொண்டாடு வது குறித்தும், விடுதலை சந்தா சேகரிப்பில் திருப்பத்தூர் முதன்மையான மாவட்டம் என்ற நிலையை தக்க வைக்கும் விதமாக தொடர்ந்து சந்தா சேகரிப்பில் ஈடுபட்டு டிசம்பர் 2இல் ஆசிரியரிடம் ஒப்படைப் பது என்றும் முடிவு செய்யப் பட்டது.
மேலும் இக் கூட்டத்தில் மாநில மகளிரணி பொருளார் அகிலா பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதேபோல் பெரியார் ஆயிரம் வினாடி-வினா போட்டி தேர்வுகளை சிறப்பாக நடத்திய தோழர்கள் ஆசிரியர் திருப்பதி. ராஜேந்தி ரன், தமிழ்ச்செல்வன். கனக ராஜ் ஆகியோரைப் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.
இதில் மாநில பகுத்தறிவா ளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில மண்டல செயலாளர் எ. சிற்றரசு, மாநில மகளிரணி பொருளார் எ. அகிலா ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.
மகளிர் பாசறைப் பொறுப் பாளர் மணிமொழி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment