திருவனந்தபுரம், செப்.12- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் நடைப் பயணத்தை தொடங்கினார்.
“பாரத் ஜோடா யாத்ரா’’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாடு பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று (11.9.2022) கேரளாவில் நடைப்பயணத்தை மேற் கொண் டார்.
திருவனந்தபுரம் மாவட்டம், பாரசாலாவில் இருந்து தொண் டர்கள் புடைசூழ அவர் நடந்து சென்றார். வழிநெடுக கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அவ ருக்கு வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் சசி தரூரும் நடைப்பயணத்தில் பங்கேற்றார்.
கேரளாவில் பாரசாலாவில் இருந்து நிலம்பூர் வரை மொத்தம் 450 கி.மீ. தொலைவை ராகுல் காந்தி கடக்க உள்ளார்.
விழிஞ்சியத்தில் அதானி துறைமுகத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரு கின்றனர். போராட் டத்தை முன்னின்று நடத்தி வரும் தலைவர்களை, ராகுல் இன்று சந்தித்து பேசுகிறார்.
வரும் 14-ஆம் தேதி கொல்லம், 17-ஆம் தேதி ஆலப்புழா, 21-ஆம் தேதி எர்ணாகுளம், 23-ஆம் தேதி திருச்சூர், 26-ஆம் தேதி பாலக்காடு, 28-ஆம் தேதி மலப்புரம் ஆகிய பகுதிகளை அவர் சென்றடைவார்.
கேரளாவில் 19 நாட்கள் நடை பயணத்துக்குப் பிறகு அவர் கருநாடகாவுக்கு செல்வார் என்று கட்சி வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment