ஈரோடு மாவட்டம், நம்பியூர் காமராஜ் கல்வி அறக்கட்டளை நிறுவனரும், மூத்த வழக்குரைஞரு மான மானமிகு என்.கே.கருப்புசாமி (வயது 86) இன்று (22.9.2022) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
அண்மையில் நம்பியூர் காமராஜ் பள்ளியில் நடைபெற்ற விழாவில் நாம் கலந்து கொண்டபோது அவரைச் சந்தித்து அளவளாவினோம். காமராஜர் மீது மிகுந்த பற்றுக் கொண்டு காமராஜர் கல்வி அறக்கட்ட ளையைத் தொடங்கி நம்பியூர் பகுதியில் கிராமப்புற மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் கல்வி பெறுவதற்கு காரணமாக விளங்கியவர்.
காங்கிரஸ் இயக்கத்தின் முன்னோடி. நம்மீதும், கழகத் தின் மீதும் பற்றுக் கொண்டவர். இன்முகத்தோடு பழகக் கூடியவர். இன்டர்மீடியட் படித்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி பின்பு பணியைத் துறந்து சட்டம் படித்து வழக்குரைஞராகத் தொண்டாற்றியவர். சுமார் 55 ஆண்டு காலம் மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமைப் பெற்றவர் - பண் பாளர்.
அவரை இழந்து வாடும் மகன் ஜவகர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.9.2022
No comments:
Post a Comment